ரொம்ப கம்மி வட்டியில் 3.50 லட்சம் ரூபாய் கடன் உதவி.! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு - உடனே விண்ணப்பிங்க
தமிழக அரசு, பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடன் உதவி திட்டங்கள் மற்றும் தொழில் முன்னேற்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறது. குறிப்பாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் மக்கள் சொந்த தொழில் செய்து முன்னேறும் வகையில் நிதி உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில பெண்கள் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மானிய கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதே போல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆதி திராவிடர்களுக்கான திட்டங்கள்
இந்த திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளைக் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளைக் மேற்கொள்ளப்படும் திட்டமாகும். இதே போல கல்வி உதவி திட்டம். நிதி உதவி திட்டம் கடன் உதவி திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.
தொழில் முனைவு திட்டம்
இதில் முக்கியாக திட்டம் தான் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், இந்த திட்டமானது அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் சூப்பரான திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE) என்பது, தமிழ்நாடு அரசின் திட்டமாகும். தொழில் முனைவோர் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடன் உதவி வழங்கப்படுகிறது.
மானிய கடன் உதவி திட்டம்
இது குறித்து தமிழகத்தில் அந்த அந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மூலம் கடன் உதவி பெற்றவர்கள் தவனைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு கூடுதல் சலுகையாக மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க அழைப்பு
இந்த திட்டத்தின் தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் கடன் உதவி பெற புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (https://newscheme.tahdco.com)விண்ணப்பம் செய்து பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர்.