- Home
- Tamil Nadu News
- Salary Hike: குட் நியூஸ்! 5 சதவீத ஊதிய உயர்வு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
Salary Hike: குட் நியூஸ்! 5 சதவீத ஊதிய உயர்வு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை உயர்வு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை திமுக அரசு வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அதாவது அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆகவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.
இதனிடையே பள்ளி கல்விதுறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் பணியாற்றும் முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட தொகுப்பூதியதாரர்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: தொகுப்பூதியத்தில் பணியாற்றும் புரோகிராமர், சிவில் பொறியாளர், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர், எஸ்எம்சி கணக்காளர், தரவு பதிவு அலுவலர், அலுவலக உதவியாளர், உதவியாளர் ஆகியோருக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும்.
நடப்பாண்டு ஜூன் 1-ம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். அரசுப் பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஆலோசகர்கள், உதவியாளர்களுக்கு இது பொருந்தாது. ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.