அக்டோபர் 30ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.? வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது,..
தீபாவளி கொண்டாட்டம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி புத்தாடைகள் வாங்குவதும், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடைகளில் கூட்டமானது அலைமோதி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை பெரியவர்களுக்கு கொண்டாட்டமோ இல்லையோ பள்ளி மாணவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். பட்டாசு வெடிப்பது ஒரு பக்கம் என்றால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையால் உற்சாகத்தில் உள்ளனர். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. .
தீபாவளி - 4 நாட்கள் தொடர் விடுமுறை
எனவே இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்ற தமிழக அரசு நவம்பர் 1ஆம் தேதி பொது விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை உற்சாகமாக சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி புதன்கிழமை அதாவது அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
school holiday
புதுச்சேரியில் 5 நாட்கள் விடுமுறை
நவம்பர் 1ம் தேதி புதுச்சேரி விடுதலை நாள், நவம்பர் 2ம் தேதி கல்லறை நாள், நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தீபாவளிக்கு மொத்தம் 5 நாட்கள் விடுமுறை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதனை போல் தமிழகத்திலும் தீபாவளிக்கு முந்தைய நாள் புதன்கிழமை அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை அளிக்க பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கைக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. எனவே தமிழகம் முழுவதும் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி மட்டுமே கூடுதல் விடுமுறை கிடைக்கும் நிலை உள்ளது.
thevar jayanthi
தேவர் ஜெயந்தி- பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த சூழ்நிலையில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 30ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பசும்பொன்னிற்கு ஏராளமான மக்கள் வரவுள்ளனர்.
School Holiday
மேலும் முதலமைச்சர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை மரியாதை செலுத்தவுள்ளனர். இதனையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராம லிங்க தேவர் குருபூஜையையொட்டி வருகிற 30ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.