ஒரு ரூபாய் செலவு இல்லாமல் 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசையோடு தடபுடலாக திருமணம்.!தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
தமிழக அரசு ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிய திட்டத்தின் கீழ் இந்து கோவில்களில் இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற 21 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
marriage
தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்காகவே பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவிடும் வகையில் இலவரச பேருந்து பயண திட்டமான விடியல் திட்டம், மகளிர்களுக்கு சின்ன, சின்ன தேவைகளுக்கும் அடுத்தவர்களை எதிர்பார்க்காலம் சொந்தமாக வாங்கும் திறனுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், உயர்கல்வியில் பெண்கள் சேர்வதை அதிகரிக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவிடும் வகையில் 18ஆயிரம் ரூபாய் வழங்கும் உதவித்தொகை திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
marriage
தமிழக அரசின் திருமண உதவி திட்டம்
இதில் முக்கியமாக ஏழ்மையான மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு திருமணத்திற்காகவே பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த ஏழைப் பெற்றோரின் மகள்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்ததிட்டத்தின் மூலம் கல்வித்தகுதி இல்லாத திருமணம் செய்துக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இதுவே பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50ஆயிரம் ரூபாயும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட புதிய திட்டம் தான் இலவச திருமண திட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
சீர் வரிசைகள் என்ன தெரியுமா.?
அந்த வகையில் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள 'கிரேடு-ஏ', 'கிரேடு -1' கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு இலவச திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் : ரூ.20,000, மணமகன் ஆடை1000 ரூபாய், மணமகள் ஆடை: .2000 ரூபாய், திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு 2000 ரூபாய், மாலை, புஷ்பம் - 1000 ரூபாய், பீரோ : 7,800 ரூபாய், கட்டில்-ஒன்று 7,500 ரூபாய், மெத்தை : 2,200 ரூபாய், தலையணை-2 : 190 ரூபாய், பாய்-ஒன்று 180 ரூபாய், கைக்கடிகாரம்-2 : 1,000 ரூபாய், மிக்ஸி-1 1,490 ரூபாய், பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் 3,640 ரூபாய் என ஒட்டுமொத்தமாக 50ஆயிரம் ரூபாய் செலவில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்
எனவே இந்த திட்டத்தின் மூலம் எப்படி பயன் பெறுவது என்பது தொடர்பான விவரங்களை தற்போது பார்க்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் திருமணம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்பாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். மேலும் கோவிலில் கொடுக்க வேண்டிய ஆவணங்களை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவதாக முதல் திருமண செய்யப்படுகிறார் என்ற அடிப்படையில் சான்றிதழ் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை திருமணம் ஆகாதவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். 18 வயது எட்டிய பெண்ணும். 21 வயதுடைய ஆணும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
அடுத்ததாக வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்பதற்கு சான்றாக காவல்துறையின் சான்றிதழ் வழங்க வேண்டும். அடுத்ததாக மணமகன் மற்றும் மணமகளின் குடும்பத்தாரின் புகைப்படங்கள். மணமகன் மற்றும் மணமகளின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். அடுத்ததாக ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.