பொங்கல் பரிசு தொகுப்பை ஒரு நாளில் எத்தனை பேர் வாங்கலாம்? டோக்கனில் என்னென்ன தகவல் இருக்கும்?
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ள நிலையில், ஒரு நாளில் எத்தனை பேர் வாங்கலாம்? டோக்கனில் என்னென்ன தகவல் இருக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Pongal Gift Package
பொஙகல் பரிசு தொகுப்பு
பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Ration Shop
நாளை முதல் டோக்கன்
வழக்கமாக பொங்கள் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் நிலையில், இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 9ம் தேதியில் இருந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், நாளை முதல் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பா.? உண்மை என்ன.? வெளியான விளக்கம்
Pongal Gift Package Token
எத்தனை பேர் வாங்கலாம்?
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வினியோகிக்க பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் அச்சடிக்கப்பட்டு விட்டது. நாளை முதல் இந்த டோக்கன்கள் வீடு, வீடாக விநியோகம் செய்யப்படும். ரேஷன் கடைகளில் மக்கள் ஒரே நேரத்தில் குவிவதை தடுக்கும் வகையில் இந்த டோக்கன்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் காலையில் 100 பேரும், மாலையில் 100 பேரும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
Tamilnadu Goverment
டோக்கனில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
இந்த டோக்கனில் நீங்கள் எந்த நாளில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வேண்டும்? எந்த நேரத்தில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வேண்டும்? என்ற விவரங்கள் தெளிவாக இடம்பெற்றிருக்கும். அந்த டோக்கனில் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கலாம். இதன்மூலம் கூட்ட நெரிசலின்றி மிகவும் எளிதாக பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி வர முடியும்.
நாளை முதல் ஒருபக்கம் வீடுகளுக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்க்கப்படும் நிலையில், மறுபக்கம் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பணியும் தொடங்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தின் குடோன்களில் இருந்து அந்தந்த ரேஷன் அட்டைதாரர்களை பொறுத்து பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு