ஜனவரி 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
ஜனவரி மாதத்தில் மாணவர்களுக்கு குஷியான மாதமாக அமைந்துள்ளது. பொங்கல், குடியரசு தினம் போன்ற விடுமுறைகளுடன், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
school holiday
விடுமுறையோடு தொடங்கிய ஜனவரி
விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் கொண்டாட்டம் தான். எப்போது ஓய்வு கிடைக்கும் சந்தோஷமாக நண்பர்களோடு வெளியில் சுற்றலாம், உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என காத்திருப்பார்கள். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விட்டால் கேட்கவா வேண்டாம். இதன் படி இந்த ஜனவரி மாதம் விடுமுறை மாதமாகவே மாறி உள்ளது. அந்த அளவிற்கு விடுமுறை கொட்டிக்கிடக்கிறது.
School Holiday
ஜனவரியில் கொட்டிக்கிடக்கும் விடுமுறை
இந்த வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி அரசு விடுமுறை, இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா, எனவே அடுத்தடுத்து விடுமுறை கிடைப்பதால் மாணவர்கள் மட்டுமல்ல அரசு ஊழியர்களும் சந்தோஷத்தில் உள்ளனர். பல சுற்றுலா திட்டங்களை வகுத்துள்ளனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகை இந்தாண்டு செவ்வாய் கிழமை வருகிறது. எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
school holiday
கூடுதல் விடுமுறை
இது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகை தொடக்கத்திலையோ அல்லது இறுதியிலோ கூடுதலாக ஒரு நாள் அரசு விடுமுறை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் பொங்கல பண்டிகைக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதலாக ஜாக்பாட்டாக பள்ளி, கல்லூரி மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை தொடர்பாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
srirangam
திருச்சி உள்ளூர் விடுமுறை
இதன் படி வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ramanathapuram
ராமநாதபுரம் உள்ளூர் விடுமுறை
இதே போல ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோயிலுக்கு செல்வார்கள். இதனையொட்டி ஜனவரி 13ம் தேதி அன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
pongal leave
விடுமுறை-ஜாக்பாட் அறிவிப்பு
எனவே பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு கூடுதலாக ஜனவரி 13 ஆம் தேதி திங்கட்கிழமையும் கிடைக்கவுள்ளது. இதனால் மற்ற மாவட்டங்கள் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் விடுமுறை கிடைக்குமா என காத்திருந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.