- Home
- Tamil Nadu News
- டிடிவி.தினகரன் உடல்நிலை எப்படி இருக்கு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
டிடிவி.தினகரன் உடல்நிலை எப்படி இருக்கு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை நடத்தி வருகிறார். அவருக்கு நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

AMMK TTV Dhinakaran
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரன் நீக்கப்பட்டதை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.
TTV Dhinakaran
டிடிவி.தினகரனுக்கு நெஞ்சுவலி
இந்நிலையில் டிடிவி.தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அங்கு மருத்துவர்கள் அவருக்கு பல்வேறு சோதனைகள் மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதனை டிடிவி.தினகரன் தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
Apollo Hospital Statement
அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில் டிடிவி.தினகரன் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வழக்கமான பரிசோதனைக்காகவே டிடிவி.தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டிடிவி.தினகரன் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.