- Home
- Tamil Nadu News
- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அ

அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் டிடிவி.தினகரன். தனது ஸ்டைலான பேச்சு மூலம் தென் மாவட்டங்களில் இளைஞர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் டிடிவி.தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ttv dinakaran in aravakurichi
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்திருக்கும் நிலையில், அவரை டிடிவி. தினகரன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை.
Apollo Hospitals
தற்போது டிடிவி. தினகரன் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிடிவி.தினகரன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்திருக்கும் நிலையில், அவரை டிடிவி. தினகரன் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை.