MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!

Ration Card: ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்றணுமா? மக்களே அலையாதீங்க.. 5 நிமிடம் போதும்.. சிறப்பு முகாம்!

Ration Card Camp: தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு பயன்களை வழங்கி வருகிறது. ரேஷன் கார்டு பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய சூப்பர் வாய்ப்பு. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 09 2026, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இதன் மூலம் 2 கோடியே 28 லட்சத்து 41,335 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அரசின் எந்தவொரு திட்டங்களாக இருந்தாலும் சரி ரேஷன் கார்டுகள் இருந்தால் மட்டுமே பெற முடியும். குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு, வெள்ள நிவாரணம் போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : AI

இந்நிலையில் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Articles

Related image1
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?
Related image2
TN Weather Update: அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
35
Image Credit : Google

அதாவது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 11.07.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

45
Image Credit : our own

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

55
Image Credit : our own

சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரேஷன் கடை
குடும்ப அட்டை
தமிழ்நாடு அரசு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Weather Update: அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Recommended image2
CM Vijay Hospital Visit: தான் பிறந்த எழும்பூர் மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் விஜய்..
Recommended image3
Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Related Stories
Recommended image1
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?
Recommended image2
TN Weather Update: அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று.. வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved