- Home
- Tamil Nadu News
- TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?
TASMAC: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மதுபானங்கள் விலை உயருகிறது? எவ்வளவு? எப்போது தெரியுமா?
Liquor Prices: தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அருகில் உள்ள மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு வகை மதுபானங்கள், பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தினமும்120 கோடிக்கு மது விற்பனை
தினமும் சுமார் 120 முதல் 150 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மது விற்பனை நடைபெறும். அரசு இயந்திரமே டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை நம்பி இயங்குவதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
மதுபானங்கள் விலை உயர்கிறது
இந்நிலையில் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயருகிறது. இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் கூடுதல் கட்டணம் நிர்ணயித்தது.
டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டம்
இதனால் உற்பத்தி மற்றும் விநியோக செலவுகள் அதிகரித்துள்ளதாக கூறி, மதுபான ஆலை மற்றும் பீர் உற்பத்தியாளர்கள் சில்லறை விலையை உயர்த்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை அரசு உடனடியாக ஏற்கவில்லை என்றாலும், இந்த விவகாரம் டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
விலை எப்போது உயர்கிறது?
இந்த விலை உயர்வு குறித்து இன்று அல்லது நாளை மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024 பிப்ரவரி 1-ம் தேதி மதுபான விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

