நாளை டாஸ்மாக் கடைகளுக்கு மட்டுமல்ல பார்களுக்கும் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 15) தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, FL1 உரிமம் கொண்ட கடைகள் மற்றும் பார்கள் உட்பட அனைத்து டாஸ்மாக் விற்பனை நிலையங்களும் மூடப்படும்.
tasmac holiday
அதிகரிக்கும் மது விற்பனை
மதுவிற்பனையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆண்களுக்கு நிகராக பெண்களின் கைகளிலும் மதுக்கோப்பைகள் சர்வ சாதாரணமாக மாறி விட்டது. மறைந்து மறைந்து குடித்த காலம் எல்லாம் கடந்து மது குடிப்பதே பேஷனாக மாறிவிட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதுவிற்பனை மூலமாகவே வருவாய் ஈட்டி வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
liquor shops
நிதியை கொட்டிக்கொடுக்கும் டாஸ்மாக்
நாளொன்றுக்கு 100 முதல் 125 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினத்தில் 200 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனையானது நடைபெறுகிறது. மேலும் தமிழக அரசின் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திட டாஸ்மாக்கின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த அளவிற்கு டாஸ்மாக் மற்றும் பத்திரப்பதிவு துறை நிதியை அள்ளிக்கொடுக்கும் அட்ஷச பாத்திரமாக உள்ளது. மேலும் மழை வெள்ளம் புயல் மட்டுமில்லாலம் பண்டிகை காலங்களில் மற்ற அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை.
tasmac
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
எனவே தமிழக அரசு சார்பாக ஆண்டுக்கு 9 நாட்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி காந்தி ஜெயந்தி, குடியரசு தின விழா, மிலாது நபி, திருவள்ளூவர் தினம் உள்ளிட்ட 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி நாளை திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
liquor shops
நாளை டாஸ்மாக் விடுமுறை
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: ஜனவரி 15ம் தேதி (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tasmac holiday
சட்ட நடவடிக்கை- ஆட்சியர் எச்சரிக்கை
மேலும் FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.