- Home
- Tamil Nadu News
- வெளுத்து வாங்கும் கனமழை.. ரெட் அலர்ட் கொடுத்த ஆய்வு மையம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வெளுத்து வாங்கும் கனமழை.. ரெட் அலர்ட் கொடுத்த ஆய்வு மையம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வெளுத்து வாங்கும் பருவமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்டா மாவட்டங்களுக்கு ஏறக்குறைய கிழக்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காணப்படுகிறது. இன்று மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியின் வடக்குப் பகுதியில்தான் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை
இரவு நேரத்தில் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தெற்கு தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை இப்போது மெதுவாகக் குறையக்கூடும். வடக்கு கடலோர தமிழகத்தின் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும். கடந்த இரண்டு மணி நேரமாக சென்னையின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் போன்ற உள் பகுதிகளில் மழை பெய்யும்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மேலும் சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.