- Home
- Tamil Nadu News
- 4 நாட்கள் வெளுத்து வாங்கப் போகும் கனமழை! சென்னைக்கும் குட் நியூஸ்.. வானிலை அப்டேட் இதோ!
4 நாட்கள் வெளுத்து வாங்கப் போகும் கனமழை! சென்னைக்கும் குட் நியூஸ்.. வானிலை அப்டேட் இதோ!
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Tamil Nadu Weather Update
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: அக்டோபர் 2ம் தேதி (இன்று) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை
3ம் தேதி (நாளை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
4ம் தேதி (நாளை மறுநாள்) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை, தேனி
5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. தென்தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகப்பட்சமாக திண்டிவனத்தில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. செஞ்சி (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்) தலா 2 செ.மீ மழையும், புதுச்சேரி. கலவை AWS (ராணிப்பேட்டை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), மைலம் AWS (விழுப்புரம்), சின்கோனா (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.