MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மழை அடிச்சு துவம்சம் செய்யப்போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில்? அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!

மழை அடிச்சு துவம்சம் செய்யப்போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில்? அலர்ட் கொடுத்து அலறவிடும் வானிலை மையம்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 19 2025, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Image Credit : ANI

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கினர். இந்நிலையில் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
கன முதல் மிக கனமழை
Image Credit : ANI

கன முதல் மிக கனமழை

நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம். காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
School College Holiday: அடிதூள்! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 23ம் தேதி விடுமுறை! சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Related image2
அடடே..! சாப்பாட்டுல பூச்சி மருந்து கலந்து கொடுத்து என் புருஷன் சாகல! கள்ளக்காதலனுடன் மனைவி பேசிய ஆடியோ!
36
கனமழை பெய்ய வாய்ப்பு
Image Credit : ANI

கனமழை பெய்ய வாய்ப்பு

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
ஜூலை 21
Image Credit : Google

ஜூலை 21

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

56
ஜூலை 22
Image Credit : Google

ஜூலை 22

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

66
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை.? ரஜினி பரபரப்பு விளக்கம்
Recommended image2
TASMAC: விஜய் ஆட்சியில் டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி.. இனி இரவு 10 மணிக்கு மேல் போட்டோ அனுப்பணும்!
Recommended image3
Now Playing
தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கனும்.. ரஜினிகாந்த் பரபரப்பு எச்சரிக்கை
Related Stories
Recommended image1
School College Holiday: அடிதூள்! பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை 23ம் தேதி விடுமுறை! சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
அடடே..! சாப்பாட்டுல பூச்சி மருந்து கலந்து கொடுத்து என் புருஷன் சாகல! கள்ளக்காதலனுடன் மனைவி பேசிய ஆடியோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved