- Home
- Tamil Nadu News
- மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில்! வானிலை மையம் வார்னிங்!
மக்களே உஷார்! அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில்! வானிலை மையம் வார்னிங்!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சுட்டெரித்த வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகிறது என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
அதாவது இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிபேட்டை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் மழை
இந்நிலையில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கருர், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 11.8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.