MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Weather Update: தமிழகத்தில் 40 முதல் 50 கி.மீ. வேகம்.. அடிச்சு தும்சம் செய்யப்போகும் இடி மின்னலுடன் கூடிய கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

TN Weather Update: தமிழகத்தில் 40 முதல் 50 கி.மீ. வேகம்.. அடிச்சு தும்சம் செய்யப்போகும் இடி மின்னலுடன் கூடிய கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamilnadu Rain: ஜூன் மாதம் பிறந்த பிறகும் வெயில் கொஞ்சம் கூட குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 11 2026, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வெயிலால் நொந்து நூடுல்ஸாகும் பொதுமக்கள்
Image Credit : Asianet News

வெயிலால் நொந்து நூடுல்ஸாகும் பொதுமக்கள்

தென் மேற்கு பருவமழை தொடங்கினால் கொஞ்சம் கூட வெயில் குறையால் தமிழகம் முழுவதும் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நொந்து நூடுல்ஸாகி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு இடங்களில் வெயில் தொடர்ந்து சதம் அடித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. அதேபோல் தொண்டி 103, நுங்கம்பாக்கம், நாகையில் தலா 102, கடலூர், புதுச்சேரியில் தலா 102, காரைக்காலில் 101, மதுரை நகரம் 101, திருச்சி, திருத்தணியில் தலா 101, பரங்கிப்பேட்டை, தஞ்சையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை
Image Credit : Google

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை

இந்நிலையில் கனமழை குறித்து சென்னை வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!

Related Articles

Related image1
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Related image2
Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?
36
நெல்லை கோவையில் கனமழை
Image Credit : Google

நெல்லை கோவையில் கனமழை

அதேபோல் நாளை திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

46
ஜூன் 13 வானிலை நிலவரம்
Image Credit : Google

ஜூன் 13 வானிலை நிலவரம்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

56
ஜூன் 14 இடி மின்னலுடன் மழை
Image Credit : our own

ஜூன் 14 இடி மின்னலுடன் மழை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 15,16 மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

66
சென்னை இடி மின்னலுடன் மழை
Image Credit : our own

சென்னை இடி மின்னலுடன் மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
கணவர் இல்லாமல் வாழும் தமிழ்ப் பெண்கள் : இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் டாப்! அதிர்ச்சியூட்டும் உண்மை!
Recommended image2
Ration Card Correction: அலைச்சல் இனி இல்லை! ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு 5 நிமிடத்தில் தீர்வு.. நாள் குறித்த தமிழக அரசு!
Recommended image3
Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?
Related Stories
Recommended image1
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image2
Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved