- Home
- Tamil Nadu News
- அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் விடுமுறை! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 10 முதலும், 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15 முதலும் தேர்வுகள் தொடங்கி டிசம்பர் 23 அன்று முடிவடைகின்றன.

அரையாண்டு தேர்வு அட்டவணை
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
6ம் முதல் 9ம் வகுப்பு தேர்வு அட்டவணை
அதன்படி, 6 முதல் 9ம் வகுப்பு வரைக்கும் 15ம் தேதி (திங்கள் கிழமை) தமிழ், 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம், 17ம் தேதி (புதன்கிழமை) விருப்ப மொழி, 18ம் தேதி (வியாழக்கிழமை) கணிதம், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) உடற்கல்வி, 22ம் தேதி (திங்கள் கிழமை) அறிவியல், 23ம் தேதி (செவ்வாய் கிழமை) ) சமூக அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது. இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.
10ம் வகுப்பு தேர்வு அட்டவணை
10ம் தேதி (புதன்கிழமை) தமிழ், 12ம் தேதி (வெள்ளிக் கிழமை) ஆங்கிலம், 15ம் தேதி (திங்கள் கிழமை) கணிதம், 18ம் தேதி (வியாழக்கிழமை) அறிவியல், 22ம் தேதி (திங்கள் கிழமை) சமூக அறிவியல், 23ம் தேதி (செவ்வாய் கிழமை) விருப்ப மொழி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
11ம் வகுப்பு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10ம் தேதி (புதன் கிழமை) தமிழ், 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆங்கிலம், 15ம் தேதி (திங்கள் கிழமை) இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், 17ம் தேதி (புதன்கிழமை) கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், 22ம் தேதி (திங்கள்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 23ம் தேதி செவ்வாய் கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம். இந்த தேர்வு பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
12ம் வகுப்பு தேர்வு அட்டவணை
டிசம்பர் 10ம் தேதி (புதன்கிழமை) தமிழ், 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆங்கிலம், 15ம் தேதி ( திங்கள் கிழமை) கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை வேளாண் அறிவியல், ஜெண்ட்ரல் நர்சிங், 17ம் தேதி (புதன்கிழமை) வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள், 22ம் தேதி (திங்கள்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பேசிக் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், 23ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்), ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் (தொழிற்கல்வி), பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.
அரையாண்டு தேர்வு விடுமுறை
டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவைகள் அடங்கும்.