MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அடுத்தடுத்து பறிமுதல் செய்த போலீஸ்.! காரணம் என்ன.?

பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அடுத்தடுத்து பறிமுதல் செய்த போலீஸ்.! காரணம் என்ன.?

பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு வழங்கிய இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டுவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, சமூக நலத்துறை ஆய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இதுபோல் நிகழ்ந்தால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Ajmal Khan
Published : May 01 2025, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களில் சொந்தமாக முன்னேற வேண்டும் என்பதற்காக கடன் உதவி திட்டங்கள், மகளிர் உரிமை தொகை,  சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக சென்னையில் பெண்களுக்காக பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  அந்த வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ் கருவிபொருத்தப்பட்ட

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ

பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ

இளஞ்சிவப்பு ஆட்டோசேவை நடைமுறைபடுத்தப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் சட்டப்பேரவை அறிவித்தார். இதனையடுத்து  ரூபாய் ஒரு இலட்சம் மானியம் மற்றும் வங்கி கடனுதவியுடன் கடந்த 8 மார்ச் 2025ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால்  இத்திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்பட்டது. இந்த நிலையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டிவருவதாக புகார்கள் எழுந்தன

Related Articles

Related image1
ரூ.1 லட்சம் மானியத்தோடு பெண்களுக்கு ஆட்டோ.! இரண்டாம் கட்டம் அறிவிப்பு- விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
Related image2
தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
34
பிங்க் ஆட்டோவை ஓட்டும் ஆண்கள்

பிங்க் ஆட்டோவை ஓட்டும் ஆண்கள்

 இதுதொடர்பாக சமூக நலத்துறை கள ஆய்வுகுழு கடந்த சில நாட்களாக ஆய்வுகளை மேற்கொண்டனர், இதில் சில ஆண்கள் ஓட்டுவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது. 

இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டு விதிகளை மீறினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சமூக நலத்துறையால் எச்சரிக்கப்பட்டது. 

44
பிங்க் ஆட்டோ பறிமுதல்- அரசு

பிங்க் ஆட்டோ பறிமுதல்- அரசு

இந்த நிலையில், சமூக நலத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கி வருவது கண்டறியப்பட்ட நிலையில் 2 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இது போல் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார். தெரிவித்துள்ளார். 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பிங்க் ஆட்டோ
தமிழ்நாடு அரசு
காவல்
குற்றம்
பெண் அதிகாரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Related Stories
Recommended image1
ரூ.1 லட்சம் மானியத்தோடு பெண்களுக்கு ஆட்டோ.! இரண்டாம் கட்டம் அறிவிப்பு- விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
Recommended image2
தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved