- Home
- Tamil Nadu News
- இனி டோல்கேட்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை! 2 வாரங்களில் அமல்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
இனி டோல்கேட்களில் நிற்க வேண்டிய அவசியமில்லை! 2 வாரங்களில் அமல்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
Satellite Based Toll Collection: இந்தியாவில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. வாகன நெரிசலைக் குறைக்க, பாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் சாட்டிலைட் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

Toll Gate
தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள்
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. இப்படி போடப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
Fastag
பாஸ்டேக் நடைமுறை
தமிழ்நாட்டில் மொத்தம் 5,381 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக மேலும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லவே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கு தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாஸ்டேக் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதையும் படிங்க: FASTagல் புதிய பாஸ் திட்டம்! எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கசாவடியை கடக்கலாமாம்
Nitin Gadkari
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி
அப்படி இருந்த போதிலும் முக்கிய சுங்கச்சாவடிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை அவ்வப்போது காண முடிகிறது. அதுவும் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்த இரண்டு வாரங்களில் சாட்டிலைட் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Satellite based Toll System
சாட்டிலைட் மூலம் சுங்க கட்டணம்
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் இனி வாகனங்களை சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்டிலைட் அடிப்படையில் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும். இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பயணிக்கலாம். satellite