MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, கார்த்திகை தீபத்திற்காக ஃபிரிட்ஜின் மீது ஏற்றி வைக்கப்பட்ட அகல் விளக்கால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறியதில் வீட்டில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 06 2025, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன முனியசாமி. இவரது மனைவி காளியம்மாள். இந்த தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீபத்திருநாளின் 3-வது தினத்தை முன்னிட்டு நேற்று மாலை காளியம்மாள் அவர்களது வீட்டில் விளக்கு ஏற்றும் போது வீட்டிலுள்ள ஃபிரிட்ஜின் மீதும் ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அருகிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : social video

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஃபிரிட்ஜ் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு தீப்பற்றி ஃபிரிட்ஜ் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த மின்சாதனப் பொருட்களில் தீப்பற்றி கட்டில், பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் என அனைத்து தீயில் எரிந்து நாசமாகின.

34
Image Credit : Asianet News

இதையடுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து, சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை ஒரு வழியாக மீட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

44
Image Credit : Asianet News

இந்த மின் விபத்தில் சின்ன முனியசாமி வீட்டில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீ விபத்து
காவல் நிலையம்
தமிழ்நாடு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Recommended image2
Govt Scheme: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் – தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!
Recommended image3
TNEB : மின்தடையை இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்! 24 மணி நேரமும் சேவை!
Related Stories
Recommended image1
அதிகாலையிலேயே கோர விபத்து! இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! 5 பேர் சம்பவ இடத்திலேயே ப*லி
Recommended image2
குடிமகன்களுக்கு பேரதிர்ச்சி! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 8 நாட்கள் விடுமுறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved