- Home
- Tamil Nadu News
- இபிஎஸ்-ஐ தொடர்ந்து செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! யாரை சந்தித்தார் தெரியுமா?
இபிஎஸ்-ஐ தொடர்ந்து செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! யாரை சந்தித்தார் தெரியுமா?
Sengottaiyan Sudden Visit Delhi; எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனும் டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் இடையே மோதல்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு
இதில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் அதாவது இருமொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையரை, டாஸ்மாக் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாகவும் தெரிவித்தார். இன்னும் தேர்தலுக்கு ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் அதற்குள் என்ன அவசரம் என கூறியிருந்தார். இருந்தாலும் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடந்ததகாவும், அதற்கு சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாகவும் தகவல் வௌியானது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி சந்திப்பதை தவிர்க்க செங்கோட்டையன் செய்த வேலை!
அண்ணாமலை டெல்லி பயணம்
அதற்கு அடுத்த நாளே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். மேலும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
செங்கோட்டையன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். அங்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். எந்த காரணத்திற்காக டெல்லி சென்றார், நிர்மலா சீதாராமனை எதற்காக சந்தித்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து ஓபிஎஸ் மகன் போட்ட பதிவு வைரல்!
செங்கோட்டையன்
ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு சரிப்பட்டு வரவில்லையென்றால் செங்கோட்டையனை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எது எப்படியோ 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி என நம்ப தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.