MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத சரண்யா.. முருகனை வைத்து கணவர் கதையை முடித்த கொடூரம்.. விசாரணையில் பகீர்

இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத சரண்யா.. முருகனை வைத்து கணவர் கதையை முடித்த கொடூரம்.. விசாரணையில் பகீர்

Crime News: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், அவரது மனைவி சரண்யா தனது கள்ளக்காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 09 2026, 08:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : stockPhoto

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சுதிக்‌ஷன் (9) என்ற மகனும் யக்சிதாஸ்ரீ (6) என்ற மகளும் உள்ளனர்.

24
Image Credit : Asianet News

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சரண்யா தனது குழந்தைகளுடன் குமாரபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், சதீஷ்குமார் திடீரென கடந்த 3-ம் தேதி மாயமாகினார். இதுகுறித்து மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பி.ஏ.பி வாய்க்காலில் காணாமல் போன சதீஷ்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

Related image1
நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்! கதறிய 70 வயது சென்னம்மாள்! விடாத கொடூரன்கள்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
Related image2
எடப்பாடி முதுகில் குத்திவிடுவார்..! பிரேமலதாவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே SP வேலுமணி தான்.! உண்மையை போட்டுடைத்த விஐபி.!
34
Image Credit : Asianet News

பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. இதில், சரண்யாவின் பெரியம்மா மகளான சுகன்யாவின் கணவர் முருகன்(45) என்பவருக்கும் சரண்யாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கணவர் சதீஷ்குமார் மனைவி சரண்யா மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர்.

44
Image Credit : Google

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி செஞ்சேரிமலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் முருகன் தனது நண்பர்கள் கோபிநாத் (30), சிவலிங்கம் (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் மது அருந்தினார். அப்போது சதீஷ்குமார் குமாரபாளையத்தில் உள்ள தனது குழந்தைகளைப் பார்க்க வந்தார். இந்த தகவலை சரண்யா கள்ளக்காதலன் முருகனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வழியாக வந்த சதீஷ்குமாரிடம் முருகன் உள்ளிட்ட 4 பேரும் வழிமறித்து அடித்து கொலை செய்து வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக சரண்யா, கள்ளக்காதலன் முருகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
கணவன்
பெண்கள்
குற்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சங்கீதாவை தூண்டிவிட்டதே ஸ்டாலின் தான்..! விஜய்க்கு முதல்வர் முதல்வர் பதவி..! அமித் ஷா ஆஃபர்..!
Recommended image2
சென்னையில் இரட்டை கொ*லை.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்
Recommended image3
Now Playing
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திருச்சி மாநாடு ! பிரமாண்ட ஏற்பாடுகள் !
Related Stories
Recommended image1
நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்! கதறிய 70 வயது சென்னம்மாள்! விடாத கொடூரன்கள்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
Recommended image2
எடப்பாடி முதுகில் குத்திவிடுவார்..! பிரேமலதாவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே SP வேலுமணி தான்.! உண்மையை போட்டுடைத்த விஐபி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved