MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்! கதறிய 70 வயது சென்னம்மாள்! விடாத கொடூரன்கள்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

நள்ளிரவில் நிர்வாணமாக வந்த நபர்! கதறிய 70 வயது சென்னம்மாள்! விடாத கொடூரன்கள்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

Krishnagiri: ஊத்தங்கரையில் அடையாளம் தெரியாத நபர்  70 வயது சென்னம்மாளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 09 2026, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகாவலசை கிராமத்தில் கண்ணப்பன்(75). விவசாயி. இவரது மனைவி சென்னம்மாள் (70). இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் வெளியே கண்ணப்பன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ப நபர் நிர்வாணத்துடன் வந்துள்ளார். வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கண்ணப்பனை மர்ம நபர் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

கணவரின் சத்தம் கேட்டு அவரது மனைவி சென்னம்மாள் கதவு திறந்து வெளியே வந்த போது அவரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைனக்கு அனுப்பி வைத்தனர்.

34
Image Credit : Asianet News

இதில் கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக அவரது மனைவி சென்னம்மாள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த கண்ணப்பனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

44
Image Credit : our own

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் வீடு புகுந்து வயதான தம்பதியினரை தாக்கி கொலை செய்தது மட்டுமல்லாமல் பலாத்காரம் செய்த சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
பெண்கள்
காவல் நிலையம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம்: சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
Recommended image2
Now Playing
விஜய் ஆட்சியில் எதிர்பார்த்த அளவிற்கு புதிய பெரிய திட்டங்கள் எதுவும் வரவில்லை ! எடப்பாடி பேட்டி
Recommended image3
Now Playing
புதிய தமிழக தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? எடப்பாடி பழனிசாமி அதிரடி கேள்வி
Related Stories
Recommended image1
டாஸ்மாக்கால் அதிகரிக்கும் கைம்பெண்கள்! அரசு மதுவை விற்றுக்கொண்டு மகளிர் தினத்தை கொண்டாடுவது சரியா! சொல்வது யார் தெரியுமா?
Recommended image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்.. கதறிய கோவை கல்லூரி மாணவி! விடாத கொடூரன்கள்! கோர்ட் கொடுத்த பரபரப்பு தீர்ப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved