எடப்பாடி பழனிசாமி சந்திப்பதை தவிர்க்க செங்கோட்டையன் செய்த வேலை!
Sengottaiyan Vs Edappadi Palanisamy: முன்னாள் அமைச்சர் வேலுமணி மகன் திருமண வரவேற்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஆனால், செங்கோட்டையன் எடப்பாடியை சந்திக்காமல் முன்னதாகவே சென்றுவிட்டார்.

SP Velumani
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் விஜய் விகாஷ் - தீக்ஷனாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சியத்தார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 3ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நந்தம் விஸ்வநாதன் ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
SP Velumani Marriage Function
இந்நிலையில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் ஏபிசி ஆகிய ஹால்களில் நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் ஏபிசி ஆகிய ஹால்களில் நேற்று நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்துள்ளார். அதாவது செங்கோட்டையன் மாலை 3 மணியளவில் விழா நிகழ்விடத்துக்கு வந்து, மணமக்களை வாழ்த்திவிட்டு கிளம்பிவிட்டார். எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 6.30 மணியளவில் வந்தார். அரை மணி நேரம் விழா அரங்கில் இருந்தார். பின்னர், காரில் புறப்பட்டு சென்றார். எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கவே செங்கோட்டையன் முன்னதாக வந்து சென்றுள்ளார்.
Sengottaiyan
முன்னதாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் காணொளி காட்சி வாயிலாக எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் ஒரு அணியினரும், கோபிசெட்டிபாளையம் பொறுப்பாளரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே. செல்வராஜ் அணியினர் என மொத்தம் 87 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Edappadi Palanisamy
காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தது. கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டு சென்றார். இதனை தொடர்ந்து வெளியே வந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கையெழுத்து கும்பிடுகிறோம் பேட்டி இல்லை என கிளம்புங்கள், கருத்து சொல்வதற்கான கூட்டம் இது இல்லை. தற்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது மற்றொரு நாள் கூறுகிறேன் என்றார்.
Sengottaiyan Vs Edappadi Palanisamy
தமிழகம் முழுவதும் நடைபெற்ற காணொளி கலந்தாய்வு கூட்டத்தில் எந்த கருத்தும் கேட்காமல் செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணுக்கு நன்றி மட்டுமே எடப்பாடி தெரிவித்ததாக கூறப்படுகிறது. காலை முதல் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த செங்கோட்டைன் தலைமையிலான நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி பேசாதது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கு உச்சக்கட்ட மோதல் நிலவி வருவதாக செய்தி வெளியான நிலையில் இதன் மூலம் அது உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறகின்றனர்.