- Home
- Tamil Nadu News
- Meena Jayakumar: திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?
Meena Jayakumar: திமுக முக்கிய பெண் பிரமுகர் தவெகவில் இணைகிறார்? யார் இந்த மீனா ஜெயக்குமார்?
Meena Jayakumar Vs Sengottaiyan: முன்னாள் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு முன்பு திமுக மகளிரணி துணைச் செயலாளராகவும் பதவி வகித்தார். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர் ரெஸில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அதேபோல் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைமையிடம் கோவை சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு, மனு தாக்கல் செய்திருந்தார். வேட்பாளர் நேர்காணலிலும் கலந்து கொண்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்காமல், சிங்காநல்லுார் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டினை மீனா ஜெயக்குமார் சந்தித்தது பேசியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதுதொடர்பாக திமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு வீடியோ வெளியிட்டு மீனா ஜெயக்குமார் திமுகவிற்கு பதிலடி கொடுத்தார். அதாவது திமுக தோற்க காரணமே, சோசியல் மீடியாவில் இப்படி ஒவ்வொருவரை பற்றியும் கமெண்ட் போடுபவர்கள்தான். லீமா ரோஸ் என் கூட பிறந்த அக்கா மாதிரி. 20 ஆண்டு குடும்ப நண்பர். முதலில் நாங்கள் நண்பர்கள், அப்புறம்தான் கட்சிக்குள் வந்தோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் நான் கட்சிக்காக ஓடி ஓடி உழைத்துள்ளேன். தலைவர் காலில் விழுந்து பதவி பெற முடியும். ஆனால் உழைப்பிற்கான அங்கீகாரம் தானாக வர வேண்டும். திமுக சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அடுத்து எந்த கட்சியின் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மீனா ஜெயக்குமார் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

