- Home
- Tamil Nadu News
- ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் அண்ணாமலை வாங்கிய சொத்துக்கள் படம் வெளியீடு..! கதறவிடும் பாஜக உள் கட்சி எதிரிகள்
ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர் அண்ணாமலை வாங்கிய சொத்துக்கள் படம் வெளியீடு..! கதறவிடும் பாஜக உள் கட்சி எதிரிகள்
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை வாங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளே இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் உள்ளனர். அந்த வகையில் அண்ணாமலையில் அதிரடி அரசியலால் அனைத்து அரசியல் கட்சிகளும் திருப்பி பார்த்தது. ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக தினந்தோறும் பேட்டிகள், போராட்டங்கள், ஆடியோ வெளியீட்டால் திமுகவினர், அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் தான் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக, ஆனால் மாநில தலைவராக இருந்த அண்ணாமலையின் பேச்சால் பாதியிலேயே கூட்டணி உடைந்தது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவும் படு தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற திமுகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்க மீண்டும் பாஜக தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தது. இதற்கு இடையூறாக இருந்த அண்ணாமலையை நீக்கி புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்திருந்தார். ஆனால் எம்பி பதவி கூட அண்ணாமலைக்கு வழங்கப்படவில்லை. இதற்கு பின்னனியில் அண்ணாமலைக்கு எதிராக கட்சிக்குள் இருந்தே பலரும் காய்களை நகர்த்தினர். குறிப்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் பதிவுதுறை அலுவலகத்தில் ஜூலை மாதம் சுமார் 80கோடி மதிப்பிலான 14 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை பெயரில் வாங்கியதாக தகவல் வெளியானது. இதற்காக பத்திர பதிவு செய்யப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்ட இருந்தது. 4.5 கோடி ரூபாய்க்கு இந்த நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் நிலத்தின் மதிப்பு குறைக்கப்பட்டு வரியை குறைத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பரப்பியது திமுகவோ அல்லது எதிர்கட்சியோ இல்லை. பாஜகவில் உள்ள நிர்வாகிகளே பரப்பி வருகிறார்கள்.
ஆனால் இந்த நிலம் அண்ணாமலை சொந்த உழைப்பில் வாங்கியதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில் இதற்கு பாஜகவின் மூத்த நிர்வாகியா இருந்த கல்யாண ராமன் பதிலடி கொடுத்துள்ளார். கல்யாண ராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எங்கள் தலைவர் அண்ணாமலை பெங்களூரில் பெரிய நிறுவனம் நடத்துகிறார். அதில் வரும் பணத்தை வைத்துதான் நிலம் வாங்கினார்...இப்படிக்கு வார் ரூம் பைத்தியங்கள் தெரிவித்து வருவதாக கூறியுள்ளவர்,
CORE TALENT AND LEADERSHIP DEVELOPMENT PRIVATE LIMITED எனப்படும் அண்ணாமலை + மனைவி அகிலா + விஸ்வநாத் கிரண் ஆகியோர் நடத்தும் இந்த நிறுவனத்தின் சென்ற ஆண்டிற்கான (2023-24) மொத்த லாபமே 21 லட்சங்கள் தான். அதாவது லாபத்தை மூவருக்கும் என பிரித்தால் தலைக்கு மாதம்60 ஆயிரம் கூட தேறாது என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாஜகவின் பிரபலமான நபராக இருந்த கல்யாணராமன் வெளியிட்டுள்ள அண்ணாமலையின் நிலம் தொடர்பான வீடியோவில் உண்மை தன்மை குறித்து சரியாக தெரியவில்லை என்றாலும் அவர் வெளியிட்டுள்ள பத்திரப்பதிவு துறை நகல்கள் உண்மையானது என தெரியவந்துள்ளது