தொண்டையில் சிக்கிய உயிர் மீன்! துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்! நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே ஏரியில் மீன் பிடித்த இளைஞர், மீனை வாயில் கவ்வியபோது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

Madurantakam Lake
கீழவலம் ஏரி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அரையப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் நேற்று, கீழவலம் ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.
Fish Stuck
தொண்டையில் சிக்கிய உயிர் மீன்
அப்போது அவரது கையில் பனங்கொட்டை மீன் ஒன்று சிக்கியுள்ளது. அதை வாயில் கவ்விக் கொண்டி மீண்டும் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, வாயில் கவ்விக்கொண்டிருந்த மீன் நழுவி அவரது தொண்டைக்குள் சென்று சிக்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்!
chengalpattu hospital
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை
இதனால் மூச்சு விட முடியாமல் மணிகண்டன் திணறியுள்ளார். அவருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மணிகண்டனை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Police investigation
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் பிடித்த மீனை வாயில் கவ்விய போது எதிர்பாராத விதமாக விழுங்கிய இளைஞர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது.