MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 10 2025, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamilnadu Weather Update

Tamilnadu Weather Update

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரி தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் அவ்வப்போது ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
tamilnadu rain

tamilnadu rain

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகர்ந்து, அதற்கடுத்த  24  மணி நேரத்தில்  வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில்  படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. 

35
Heavy Rain

Heavy Rain

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: கோவை மட்டுமல்ல இந்த மாவட்டங்களிலும் கொட்டோ கொட்டுன்னு கொட்ட போகுதாம் மழை! வானிலை மையம்!

45
Chennai weather update

Chennai weather update

சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை  36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

55
Heatwave

Heatwave

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 

இன்று  தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ்  வரை படிப்படியாக உயரக்கூடும் என  சென்னை வானிலை மையம்  தகவல் தெரிவித்துள்ளது. 
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கனமழை
தமிழ்நாடு வானிலை
கோடைக்காலம்
வெப்ப அலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
TVK: எந்த நேரத்தில் தவெக வேட்பாளரை தொட்டாரோ இபிஎஸ்! அதிமுக பிரமுகர்களை சொல்லி சொல்லி தூக்கும் விஜய்.. இன்று 6 முன்னாள் அமைச்சர்!
Recommended image2
TN Weather Update: இன்று 4 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்; 13 மாவட்டங்களில் கனமழை.. உங்க ஊர் இருக்கா?
Recommended image3
Now Playing
தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved