- Home
- Tamil Nadu News
- ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி.! விண்ணப்பிக்க தமிழக அரசுஅழைப்பு - யாருக்கெல்லாம் தெரியுமா.?
ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி.! விண்ணப்பிக்க தமிழக அரசுஅழைப்பு - யாருக்கெல்லாம் தெரியுமா.?
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மரணமடைந்த அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வேலை
தமிழக அரசு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டில் வேலைக்கு சென்ற நிலையில் அங்கு திடீரென மரணம் அடைந்தவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் திடீரென்று மரணம் எய்தும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூபாய் ஒரு லட்சம் வீதம் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.
நிதி உதவி வழங்கும் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அயலகத் தமிழர்களின் நலனை உறுதிப்படுத்த, "அயலகத் தமிழர் நல வாரியம்" உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இவ்வாரியத்தில் சுமார் 28,000 நபர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
தகுதி என்ன.?
தகுதி என்ன.?
அயல்நாடுகளில் உயிரிழக்கும் அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர்களின் இந்நிதியுதவி பெற குடும்பத்தினர் தகுதியுடையவர்கள் ஆவார்கள். (அனைத்து வகை இறப்பிற்கும் இத்திட்டம் பொருந்தும்).
உயிரிழந்த நபர் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்க வேண்டும். (உறுப்பினர் அட்டை காலாவதியாகாமல் இருக்க வேண்டும்).
உயிரிழக்கும் போது அயல்நாட்டில் முறையான ஆவணங்களுடன் பணியில் இருந்திருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
உயிரிழந்தவரின் கடவுச்சீட்டு (இந்திய தூதரகத்தால் இரத்து செய்யப்பட்டது),
அயல் நாட்டின் இறப்புச் சான்று மற்றும் இந்திய தூதரகத்தின் இறப்பு
சான்று
உயிரிழக்கும் போது அயல்நாட்டில் பணிபுரிந்ததற்கான சான்று (Visa. Work Permit, Civil Id. Residence ID., топ, ाना அட்டை முதலியவை).
வாரிசு சான்று
வருமான சான்று
ஆதார் அட்டை
விண்ணப்பிக்கும் மற்றும் செயல்படுத்தும் முறை
அயல்நாட்டில் உறுப்பினர் உயிரிழந்த ஒன்பது மாத காலத்திற்குள் குடும்பத்தினர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் நேரடியாகவோ அல்லது இவ்வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியின் அடிப்படையில் பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட
ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் நிதியுதவி வழங்கப்படும்.
குடும்பத்தினரின் சான்றுகளின் அடிப்படையில், குடும்பத்தினர் வறிய நிலையில் இருக்கின்றார்களா என்பதற்கான அறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலம் பெறப்படும்.
விண்ணப்பங்கள் சரிபார்ப்பிற்கு பின். தெரிவு செய்யப்படும் குடும்பத்தினருக்கு (வாரிசுதாரருக்கு) ரூபாய் ஒரு லட்சம் வழங்க நிதி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மூலம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.
குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்ட விவரம் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அறிக்கையாக பெறப்படும்.