- Home
- Tamil Nadu News
- யாரும் இல்லாத நேரத்தில் காதலனுடன் தனிமையில் இருந்த மகள்! வீட்டுக்கு பூட்டு போட்டு தந்தை என்ன செய்தார் தெரியுமா?
யாரும் இல்லாத நேரத்தில் காதலனுடன் தனிமையில் இருந்த மகள்! வீட்டுக்கு பூட்டு போட்டு தந்தை என்ன செய்தார் தெரியுமா?
குளச்சல் அருகே வேலைக்கு சென்று திரும்பிய தந்தை, தனது 17 வயது மகள் காதலனுடன் வீட்டில் தனிமையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டை வெளிப்புறமாக பூட்டி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனார். இவரின் மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொத்தனாரின் மகள், இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தந்தை மகளை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கொத்தனார் கேரளாவில் வேலைக்கு சென்று விட்டு ஊருக்கு வந்தார். அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. அவரது மகள், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களை அழைத்துள்ளார். அப்போது மகனின் காதல் விவகாரத்தை கூறியுள்ளார்.
அங்கு வந்த பொதுமக்கள் வீட்டை சுற்றி வளைத்து அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். இதனையடுத்து காதலனிடம் விசாரணை நடத்திய போது குளச்சல் அடுத்துள்ள கொத்தனார் விளையை சேர்ந்தவர் என்பதும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் குளச்சல் துறைமுகத்தில் வேலைக்கு சென்று வந்தார்.
இதையடுத்து இருவரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் மாணவனின் செயலை பெற்றோரிடம் கூறி அவரை கண்டித்து அனுப்பி வைத்தனர்.