- Home
- Tamil Nadu News
- விவசாயிகளுக்கு குட்நியூஸ்...வங்கி கணக்கில் 1.20 லட்சம் ரூபாய்.! கம்மியான வட்டி- அள்ளிக்கொடுக்கும் அரசு
விவசாயிகளுக்கு குட்நியூஸ்...வங்கி கணக்கில் 1.20 லட்சம் ரூபாய்.! கம்மியான வட்டி- அள்ளிக்கொடுக்கும் அரசு
தமிழகத்தில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது, இத்திட்டத்தின் மூலம் 2 கறவை மாடுகள் வாங்கலாம்.

தமிழகத்தில் விவசாய உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் விவசாய உற்பத்தி 2025-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பளவு, 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. எனவே விவசாயத்திற்கு தேவையான திட்டங்களை அரசுகள் செயல்படுத்தி வருவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இவை மத்திய அரசு மற்றும் மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் வழங்கப்படுகின்றன. விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு 50% மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான திட்டங்கள்
சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை (250 கோழிகள்) அமைக்க 50% மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. மொத்த செலவில் 50% (ரூ.1,56,875 வரை) மாநில அரசு வழங்கும். மீதமுள்ள 50% வங்கி கடன் அல்லது சொந்த நிதி மூலம் பயனாளியால் திரட்டப்பட வேண்டும். கால்நடை மற்றும் பால் தொழில்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கடன் வழங்கப்படுகிறது.
ரூ.2 கோடி வரை வங்கி கடனுடன் 3% வட்டி மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மின்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க மானியத்துடன் கடன் உதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் 70% மானியம், 30% விவசாயிகளின் பங்களிப்பு அளிக்கும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் கறவை மாடுகள் வாங்க நிதி உதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
கறவை மாடுகள் வாங்க கடன்
இது தொடர்பாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (TABCEDCO) கறவை மாடு வாங்குவதற்காக ரூ. 1,20,000 வரை கடனுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த கடன் உதவி திட்டமானது தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ. 1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ. 60,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் எனவும், ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம், பயனாளியின் பங்கு 5 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன.?
தகுதிகள்
- பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
- வயது: 18 - 60 வரை
- மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
- குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
" தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள் :
* சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்