12 நாள் விடுமுறை.! குஷியான மாதமாகும் ஆகஸ்ட்- துள்ளி குதிக்கும் மாணவர்கள்
2025-2026 பள்ளி நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகள் உட்பட, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை விடுமுறைகளும் அடங்கும்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் ஜூன் மாதம் முதல் வராத்தில் திறக்கப்பட்டது. சுமார் 45 நாட்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடங்களை படிக்க தொடங்கினர். அந்த வகையில் 2025- 2026ஆம் ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டியும் வெளியிடப்பட்டது.
இதன் படி அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்குமா.? என மாணவர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
ஜூன், ஜூலை மாணவர்களுக்கு ஏமாற்றம்
ஆனால் இந்த இரண்டு மாதங்களும் மாணவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. மொகரம் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வந்தது. இதனால் ஒரு நாள் கூடுதல் விடுமுறை கிடைக்காமல் போனது. எனவே ஆகஸ்ட் மாதமாவது பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்குமா.? எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 12 நாட்கள் விடுமுறை கிடைக்கும் மாதமாக ஆகஸ்ட் மாதம் அமைந்துள்ளது. 18 நாட்கள் மட்டுமே பள்ளி வேளைநாட்களாக உள்ளது. இதன் படி, ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதி சனி ஞாயிறு விடுமுறை, 9 , 10ஆம் தேதி சனி, ஞாயிறு விடுமுறையாக உள்ளது.
ஆகஸ்ட்டில் கொட்டிக்கிடக்கும் விடுமுறை
ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தின விடுமுறை, ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை, ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை கிடைக்கவுள்ளது.
அடுத்தாக 23 மற்றும் 24ஆம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையானது கிடைக்கவுள்ளது. எனவே ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 12 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க தொடங்கியுள்ளனர்.
ஆகஸ்ட் 12 நாள் விடுமுறை
எனவே மாணவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய இந்த ஆகஸ்ட் மாத விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறையாக ஆகஸ்ட் 15 முதல்17ஆம் தேதி வரை வரவுள்ளது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தினம்,. இதனை தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் ஞாயிறு விடுமுறை வருகிறது.
எனவே மாணவர்கள் மட்டுமல்லாது அரசு ஊழியர்களும் இந்த தொடர் விடுமுறையை நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு கொண்டாட்டமான மாதமாகவே மாறியுள்ளது.