- Home
- Tamil Nadu News
- விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
Farmers Account: பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கவும், குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு ஒரு வாரத்தில் வழங்க உத்தரவு.

வடகிழக்கு பருவமழையால் பயிர்கள் சேதம்
கடந்த ஆண்டு டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 1ம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு நெல் பணி உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
மாநிலப் பேரிடர் நிவாரண நிதி
இதனையயடுத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. இந்நிலையில், டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் கடந்த ஜனவரி 15ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு
தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு
இந்நிலையில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகைகளை உழவர்களுக்கு உடனடியாக வழங்கிடும் பொருட்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025 குறுவை பருவத்தில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து காப்பீட்டு நிறுவனங்கள் 14.02.2026க்குள் ஒப்புதல் அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15.02.2026 முதல் வரவு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை
அதேபோல, சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் 39,428 எண்கள் நடத்தப்பட வேண்டும். இதில் தற்போது 25 சதவீதம் முடிவுற்றது. மீதமுள்ள 75 சதவீதம் முடிவுற்றவுடன் பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும் சமீபத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு வார காலத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

