- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசு கிடையாது.! அமித்ஷாவிற்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அரசு கிடையாது.! அமித்ஷாவிற்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி குறித்த தகவலை எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார். அமித் ஷா கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் கூறவில்லை என்றும், டெல்லியில் மோடி தலைமையும் தமிழகத்தில் தான் தலைமை வகிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

BJP-AIADMK coalition government : தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் பாஜகவோடு இணைந்து வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அமித்ஷாவும் சென்னை வந்து அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்திருந்தார்.
Edappadi Palaniswami explains about BJP allianc
பாஜகவிற்கு அமைச்சர் பதவியா.?
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அரசு அமைக்கப்படும் என கூறினார். தொகுதி பங்கீடு, அமைச்சரவையில் பங்கெடுப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனால் அதிமுக - பாஜகவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைய இருப்பதாக பேசப்பட்டது. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவிற்கு அமைச்சரவை ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த தகவலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது - எடப்பாடி பழனிசாமி திடீரென அறிவிப்பு !
ADMK BJP alliance
திமுகவிற்கு எதிரான கூட்டணி
இன்று சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் மொத்த கருத்துடைய சர்ச்சைகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க அதிமுக திட்டமிட்டதாகவும், அதன்படி பாஜகவுடன் இந்த கூட்டணியை அமைத்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேலும் திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகளும் தனது கூட்டணியில் இருப்பதாகவும் , அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ளதை பார்த்து ஸ்டாலின் பயந்து போய் இருப்பதாகவும் அதிமுக தெரிவித்துள்ளார்
AIADMK-BJP alliance confirmed for 2026 Assembly elections
கூட்டணி அரசு இல்லை
பாஜக- அதிமுக கூட்டணி அரசு அமைக்கும் என கூறப்படுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், கூட்டணி அரசு என சொல்லவே இல்லை, நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். கூட்டணி அரசு என ஏதோ ஏதோ வித்தைகள் காட்டுகிறீர்கள், அதனை எல்லாம் விட்டு விடுங்கள், அதிமுக- பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
அமித்ஷா கூட்டணி ஆட்சி தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. டெல்லியில் பிரதமர் மோடி தலைமை, தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை என தெரிவித்துள்ளார். இதில் ஏதோ,? ஏதோ கண்டுபடித்து விஞ்ஞான மூளையில் கண்டுபிடிக்கின்ற வேளையை விட்டு விடுங்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என கூறினார்.