- Home
- Tamil Nadu News
- டெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு.. பேசியது என்ன? கசிந்த அதிரடித் தகவல்கள்!
டெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு.. பேசியது என்ன? கசிந்த அதிரடித் தகவல்கள்!
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள்? என்பது குறித்து பார்க்கலாம்.
12

Image Credit : Asianet News
அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக, அதிமுக கூட்டணி வைத்துள்ளன.
இந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணியின் பாமகவும் இன்று இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று இரவில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
22
Image Credit : X/Edappadi K Palaniswami (@EPSTamilNadu)
தொகுதி பங்கீடு இறுதியானதா?
தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு, தேர்தலை சந்திப்பதற்கான வியூகம் ஆகியவை குறித்து அமித்ஷாவிடம் இபிஎஸ் பேசுகிறார். இந்த சந்திப்பின்போது பாஜக, பாமக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் திமுக அரசின் ஊழல் பட்டியலையும் அமித்ஷாவிடம் இபிஎஸ் வழங்க உள்ளார்.
Latest Videos

