MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Tamil Nadu News
  • மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் திமுக.. மிகப்பெரிய மோசடி.. இபிஎஸ் பகீர் புகார்!

மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் திமுக.. மிகப்பெரிய மோசடி.. இபிஎஸ் பகீர் புகார்!

ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min read
Author : Rayar A
Published : Jan 07 2026, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மக்களை ஏமாற்றும் திமுக‌
Image Credit : our own

மக்களை ஏமாற்றும் திமுக‌

திமுக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்து மோசடியில் ஈடுபட போவதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''விடியா திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
கடைந்தெடுத்த கபட வேலை
Image Credit : Asianet News

கடைந்தெடுத்த கபட வேலை

நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம். 

ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!

மோசடி நாடகம்தான் இது

இந்த திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.

Related Articles

Related image1
அதிமுக பக்கம் தாவிய அன்புமணி.. 'செக்' வைத்த ராமதாஸ்.. முக்கிய அறிவிப்பு.. இபிஎஸ் ஷாக்!
Related image2
அன்புமணியை வளைத்துப்போட்ட இபிஎஸ்..! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள்..?
33
தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை மீறுவதாகும்
Image Credit : Asianet News

தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை மீறுவதாகும்

இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம். மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும்.

இனியாவது நிறுத்துங்கள்

அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் விடியா திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது விடியா திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக
தமிழ்நாடு
அரசியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tomorrow Power Cut: நாளைக்கு பவர் கட்..உங்க ஊர் பெயர் இருக்கா? முழு லிஸ்ட்டையும் செக் பண்ணுங்க!
Recommended image2
Investment: லண்டனில் முதல்வர் விஜய்... ஆட்டோமொபைல், க்ரீன் எனர்ஜியில் குவியும் முதலீடுகள்!
Recommended image3
Digital Driving Licence: லைசென்ஸ் இனி கையில் வராது! இன்று முதல் டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்
Related Stories
Recommended image1
அதிமுக பக்கம் தாவிய அன்புமணி.. 'செக்' வைத்த ராமதாஸ்.. முக்கிய அறிவிப்பு.. இபிஎஸ் ஷாக்!
Recommended image2
அன்புமணியை வளைத்துப்போட்ட இபிஎஸ்..! அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 30 தொகுதிகள்..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved