MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டாஸ்மாக்கில் குடிமகன்களுக்கு இனி குஷிதான்.! ஊழியர்களுக்கு அரசு வைத்த செக்

டாஸ்மாக்கில் குடிமகன்களுக்கு இனி குஷிதான்.! ஊழியர்களுக்கு அரசு வைத்த செக்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில், பந்தலூரில் அதிக விலைக்கு விற்ற விற்பனையாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
| Updated : Mar 20 2025, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

TASMAC overcharging seller suspension : தமிழகத்தில் மது விற்பனை தான் பணத்தை கொட்டு கொட்டு என கொட்டுகிறது. அந்த வகையில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த கடைகளில் முற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபானம் விற்பனை  செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாள் தோறும் 100 முதல் 120 கோடி ரூபாயும், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் 150 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதால் அரசின் திட்டங்களை செயல்படுத்த பெரிதும் உதவியாக உள்ளது.
 

24
tasmac

tasmac

இந்த நிலையில் மதுபானக்கடைகளில் மது விற்பனையின் போது கூடுதலாக பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டுள்ளது. அதன் படி ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் இந்த பணம் எங்கே செல்கிறது எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதனையடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை டிஜிட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இந்த நடைமுறையானது அமலில் உள்ளது. இதனால் கூடுதல் பணம் வசூலிப்பது தடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்க்கப்படுகிறது. 

34

இந்த நிலையில் தமிழ்நாடு வாணிபக்கழகத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் டாஸ்மாக் அரசு மதுபான சில்லறை விற்பனை கடையில் மதுபானத்தை அரசு நிர்ணய விலையான 200 ரூபாயை விட கூடுதலாக 40 ரூபாய் சேர்த்து க 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மதுபானத்திற்கு  தற்போதைய விலையான 220 ரூபாய் மற்றும் ஸ்டிக்கர் விலை 10 ரூபாய் சேர்த்து 230 ரூபாய்க்கு பதிலாக 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
tasmac

tasmac

எனவே விற்பனையாளர் மகேஸ்வரன் டாஸ்மாக் கடையில் விதிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது தெரியவருகிறது. எனவே கூடுதல் விலைக்கு விற்பனையில் ஈடுபட்ட விற்பனையாளர் மகேஸ்வரன் என்பவரை டாஸ்மாக் மோசடி நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விசாரணை எதிர்நோக்கும் வகையில்  தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபானக்கடைகளில் கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
டாஸ்மாக்
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு
மது பாட்டில்
வேலைவாய்ப்பு
டாஸ்மாக் கடை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
Recommended image2
CM Net Worth: தமிழகம், புதுவை, கேரளா, 5 மாநில முதல்வர்களில் யார் ரிச்?
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக வாஷ் அவுட் ஆகும்.! தளபதி விஜய பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved