- Home
- Tamil Nadu News
- Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!
தமிழகத்தில் கோழி முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கோழித் தீவன விலை உயர்வு, குளிர்கால தேவை மற்றும் பிற மாநில ஆர்டர்கள் அதிகரிப்பு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

முட்டை விலை புதிய உச்சம்
தமிழக மக்களின் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் கோழி முட்டை, தற்போது வரலாறு காணாத அளவில் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக நாமக்கல் முட்டை சந்தையில், கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல், ஹோட்டல்கள், பேக்கரிகள், சிற்றுண்டி கடைகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
முட்டை உற்பத்தியில் சாதனை படைக்கும் நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டின் “முட்டை தலைநகரம்” என அழைக்கப்படும் முக்கிய பகுதி. இங்கு 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருவதுடன், சுமார் 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
முட்டை விலை நிலவரம்
இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மேற்கொண்ட விலை மதிப்பீட்டில், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.6.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி தாக்கமாக, சில்லறை சந்தையில் ஒரு முட்டையின் விலை ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
முட்டை விலை உயர்வுக்கு காரணம் தெரிஞ்சுக்கோங்க
முட்டை விலை உயர்விற்கு, கோழி தீவன விலை அதிகரிப்பு, பராமரிப்பு செலவுகள் உயர்வு, குளிர்கால தேவைகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து அதிகமான ஆர்டர்கள் வருவது போன்ற காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதனால், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் உணவு பட்ஜெட்டில் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
இனி வாரத்துக்கு ஒரு முட்டைதான்
சுருக்கமாகச் சொன்னால், “மலிவு புரோட்டீன்” என அழைக்கப்பட்ட முட்டை, தற்போது ஆடம்பர உணவாக மாறும் நிலைக்கு வந்துவிட்டது. இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்பது தெரியாத நிலையில், பொதுமக்கள் இனி ஆம்லேட், ஆஃபாயில் போன்ற உணவுகளை குறைத்து பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

