முட்டை சமைத்த பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்க அதை சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

முட்டை நீண்ட காலமாகவே பெரும்பாலான வீடுகளின் அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றன. பெரும்பாலான மக்கள் விரைவாக சமைக்க கூடிய எளிதான சமையல் குறிப்புகளில் முதலில் தேர்வு செய்வது முட்டை தான். முட்டை சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்ல, அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இதனால் பலர் தினமும் தங்களது அன்றாட உணவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள். அதாவது முட்டையை வேக வைத்தோ அல்லது வறுவல், பொரியல் போன்று செய்வார்கள். இப்படியெல்லாம் முட்டையை செய்து சாப்பிடுவது அருமையாக இருந்தாலும், முட்டை சமைத்த பாத்திரம் சுத்தம் செய்த பிறகு அதிலிருந்து வெளிவரும் நாற்றம் குமட்டலை ஏற்படுத்தும். எனவே முட்டை பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்க அதை சுத்தம் செய்வது எப்படி என்று யோசிக்கிறீங்களா? இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை முயற்சித்து பாருங்கள். பாத்திரத்தில் இருந்து முட்டையும் துர்நாற்றம் நீங்கிவிடும். சரி அந்த இப்போது பார்க்கலாம்.

முட்டை சமைத்த பாத்திரத்தில் துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ்கள் :

  1. எலுமிச்சை சாறு ;

முட்டை சமைத்த பாத்திரத்தில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இதற்கு ஒரு துணியில் எலுமிச்சை சாற்றை நினைத்து அதை நாற்றம் அடிக்கும் முட்டை பாத்திரத்தில் நன்கு தேய்த்து சிறிது நேரம் கழித்து எப்போதும் போல சோப்பு போட்டு சுத்தம் செய்தால் பாத்திரத்தில் துர்நாத் முட்டை நாற்றம் போய்விடும்.

2. கடலை மாவு :

முட்டை சமைத்த பாத்திரத்தில் கடலை மாவை தூவி சிறிது நேரம் தேய்ந்து சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு சோப்பு போட்டு கழுவினால் முட்டை வாடை அடிக்காது.

3. பேக்கிங் சோடா :

முட்டை பாத்திரத்தில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு தண்ணீரில் பேக்கிங் சோடாவை போட்டு அந்த நீரில் முட்டை பாத்திரத்தை சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு கழுவினால் பாத்திரத்தில் துர்நாற்றம் போய்விடும்.

4. வினிகர் :

பாத்திரத்தில் அடிக்கும் முட்டையின் வாடையை போக்க முதலில் பாத்திரத்தை சோப்பு போட்டு கழுவி பிறகு அதில் ஒரு ஸ்பூன் வினிகரை ஊற்றி சிறிது அப்படியே வைத்துவிட்டு பிறகு தண்ணீரில் அலசினால் பாத்திரத்தில் முட்டை வாடை அடிக்காது. மணம் வீசும்.

5. காபி தூள் :

காபி தூளின் மணம் ரொம்பவே அற்புதமானது. இதை முட்டை பாத்திரத்தில் அடிக்கும் வாடையை நீக்கவும் பயன்படுத்தலாம். இதற்கு காபித்தூள் சேர்த்து அதில் முட்டை பாத்திரத்தை சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு எப்போதும் போல சோப்பு போட்டு பாத்திரத்தை கழுவ வேண்டும்.