MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Eesal Insect: ஈசல் ஆயுசு ஒரு நாள் மட்டும்தானா? இரவில் ஒளியைச் சுற்றி பறப்பதன் பின்னணி தெரியுமா?

Eesal Insect: ஈசல் ஆயுசு ஒரு நாள் மட்டும்தானா? இரவில் ஒளியைச் சுற்றி பறப்பதன் பின்னணி தெரியுமா?

Eesal Insect: ஈசல் ஏன் இரவில் விளக்கை நோக்கிப் பறக்கிறது? அதன் ஆயுள் உண்மையில் ஒரு நாள் தானா? ஈசலில் உள்ள புரதம், கொழுப்பு, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 25 2026, 02:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஈசல் ஆயுசு ஒரு நாள் மட்டும்தானா?
Image Credit : Pinterest

ஈசல் ஆயுசு ஒரு நாள் மட்டும்தானா?

மழைக்காலம் வந்தாலே இரவு நேரங்களில் திடீரென கூட்டம் கூட்டமாக பறந்து வந்து விளக்குகளைச் சுற்றி வட்டமிடும் ஈசலைப் பார்த்திருப்போம். சில மணி நேரங்களிலேயே அவை இறந்து கிடப்பதையும் பார்த்திருக்கலாம். அதனால் ஈசலின் ஆயுள் ஒரு நாள் மட்டும்தானா? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. ஆனால் ஈசலின் வாழ்க்கைக் கதை இதைவிட சுவாரஸ்யமானது.

ஈசல் பறப்பதற்குப் பின்னால் இருக்கும் இயற்கை நடத்தை என்ன? ஈசலின் இறக்கைகள் உதிர்ந்த பிறகு என்ன நடக்கிறது? உண்மையில் அதன் ஆயுள் எவ்வளவு, உணவாக எடுத்துக்கொள்ளப்படும் ஈசலில் இருக்கும் புரதம், கொழுப்பு, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஈசல் என்றால் என்ன?
Image Credit : Pinterest

ஈசல் என்றால் என்ன?

பொதுவாக நாம் ஈசல் என்று அழைப்பது இனப்பெருக்கத் திறன் கொண்ட கரையான்களை (Winged Termites / Alates) தான். கரையான் கூட்டத்தில் வேலைக்கரையான்கள், சிப்பாய்க் கரையான்கள், இனப்பெருக்கக் கரையான்கள் என வெவ்வேறு பணிகளைச் செய்யும் உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒரு கரையான் கூட்டம் வளர்ந்து முதிர்ச்சி அடையும் போது, அதில் புதிய கூட்டங்களை உருவாக்கும் திறன் கொண்ட இனப்பெருக்கக் கரையான்கள் உருவாகின்றன. இவை உடலில் இறக்கைகளை வளர்த்துக் கொண்டு, மழைக்குப் பிறகு மண்ணில் ஈரப்பதம் அதிகரிக்கும் காலங்களில், குறிப்பாக மாலை அல்லது இரவு நேரங்களில் ஈசல்கள் கூட்டமாக வெளிவருவதைப் பார்க்கலாம். இதைத்தான் "Swarming" என்று அழைக்கின்றனர்.

36
ஈசலின் ஆயுள் ஒரே ஒரு நாளா? உண்மை என்ன தெரியுமா?
Image Credit : Pinterest

ஈசலின் ஆயுள் ஒரே ஒரு நாளா? உண்மை என்ன தெரியுமா?

ஈசலின் ஆயுள் ஒரே ஒரு நாள் என்பது முழுமையான உண்மை அல்ல. இதில் ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் மாலை அல்லது இரவு நேரங்களில் கூட்டமாகப் பறப்பதைப் பார்க்கும் ஈசல், கரையானின் இனப்பெருக்க நிலை மட்டும்தான்.

இப்படி கரையான் கூட்டத்திலிருந்து வெளியேறும் இந்த ஈசல்கள், தனது துணையைத் தேடி புதிய இடத்தை நோக்கிப் பறக்கின்றன. இந்த பறக்கும் கட்டம் மிகவும் குறுகியதாக இருக்கலாம். விளக்குகளைச் சுற்றி கூட்டமாகப் பறக்கும் ஈசல்கள், சில மணி நேரங்களிலேயே சோர்வு அல்லது பிற காரணங்களால் இறந்துவிடலாம். இதனால்தான் ஈசலின் ஆயுள் ஒரே நாள் என்று அனைவரும் கூறுகின்றனர்.

ஆனால், அதுவே ஈசலின் முழு வாழ்க்கை அல்ல. ஈசல்கள் தங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுத்து, தங்களின் இறக்கைகளை உதிர்த்துவிடும். இதற்கு dealation என்று பெயர். பின்னர் ஆண் - பெண் இணைந்து பொருத்தமான இடத்தில் புதிய கரையான் கூட்டத்தை உருவாக்கத் தொடங்குகின்றன.

இவ்வாறு ஈசல்கள் கூட்டமாக வெளியேறுவது கரையான்களின் இனப்பெருக்கம் மற்றும் புதிய காலனி உருவாக்கத்தின் முக்கியமான இயற்கை நிகழ்வாகும்.

46
புதிய காலனி
Image Credit : Pinterest

புதிய காலனி

இப்படி உருவாகும் புதிய காலனி ஒரே நாளில் வளர்ந்துவிடுவதில்லை. சில கரையான் இனங்களில் புதிய காலனி முதிர்ச்சியடைய பல ஆண்டுகள் ஆகலாம். உதாரணமாக, ஃபார்மோசா நிலத்தடி கரையான் ( Formosan subterranean termite) எனப்படும் கரையான் இனத்தின் காலனி முதிர்ச்சி அடைய சுமார் 5 முதல் 8 ஆண்டுகள் ஆகலாம்.

ஒரே இரவில் வீடு முழுவதும் விளக்குகளைச் சுற்றி பறக்கும் இந்தச் சிறிய உயிரினங்களுக்குப் பின்னால், புதிய கரையான் கூட்டத்தை உருவாக்கும் மிகப்பெரிய இயற்கை வாழ்க்கைச் சுழற்சி இருப்பது ஆச்சரியம்தான்.

56
ஈசல் ஏன் ஒளியை நோக்கிப் பறக்கிறது?
Image Credit : Pinterest

ஈசல் ஏன் ஒளியை நோக்கிப் பறக்கிறது?

இயற்கையில் இரவில் பறக்கும் பூச்சிகள், நிலவு போன்ற தொலைவில் இருக்கும் ஒளி மூலங்களை வைத்து தங்கள் திசையை அறிந்து கொள்கின்றன. இப்படி இரவில் நிலவின் தொலைதூர ஒளியை அடிப்படையாகக் கொண்டு திசையை உணர்ந்து பறக்கும் ஈசல்கள், வீட்டின் மின்விளக்கு போன்ற அருகிலுள்ள செயற்கை ஒளியால் குழப்பமடைகின்றன.

விளக்கையே இயற்கையான ஒளி மூலமாக நினைத்து, அதைச் சுற்றியே தொடர்ந்து வட்டமிடுகின்றன. நீண்ட நேரம் விளக்கைச் சுற்றிப் பறப்பதால் சோர்வு மற்றும் அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால் சில ஈசல்கள் அங்கேயே உயிரிழக்கின்றன. இதனால் நாம் ஈசலை மழையில் தோன்றி ஒரே நாளில் இறந்துவிடுகிறது என்று நினைக்கிறோம்.

66
ஈசலில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
Image Credit : Pinterest

ஈசலில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

பல்வேறு பகுதிகளில் ஈசல்களை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் புரதம் மற்றும் கொழுப்பு கணிசமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுகளில் பதிவான முக்கிய சத்துக்கள்

  • புரதம்
  • கொழுப்பு
  • அமினோ அமிலங்கள்
  • இரும்புச்சத்து
  • துத்தநாகம்
  • கால்சியம்
  • வைட்டமின்கள்
  • சில வகைகளில் பல்வேறு கொழுப்பு அமிலங்கள்

2024 ல் வெளியான Scientific Reports ஆய்வில் கென்யாவில் உணவாகப் பயன்படுத்தப்படும் மேக்ரோடெர்மிஸ் (Macrotermes) வகை இறகுள்ள கரையான்களில் crude protein சுமார் 32.2 - 44.8 சதவீதம், கொழுப்பு சுமார் 41.2 - 49.1 சதவீதம் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2025 ல் வெளியான ஒரு ஆய்வு மதிப்பாய்வில், உண்ணக்கூடிய இறக்கையுள்ள கரையானில் (edible winged termites) புரோடீன் அளவு 12.13 சதவீதம் முதல் 69.75 சதவீதம் வரை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Milk paneer: ஒரிஜினல் பன்னீர் vs போலி பன்னீர்.! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Recommended image2
Bank Holidays: Festival Season தொடங்குது.! அக்டோபரில் இத்தனை நாள் வங்கிகள் இயங்காது.! உடனே நோட் பண்ணுங்க!
Recommended image3
E-Scooter Subsidy: இ-ஸ்கூட்டர் வாங்க அரசு மானியம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Related Stories
Recommended image1
Sea Cucumber: பெயர் வெள்ளரி..ஆனால் இது காய்கறி இல்லங்க..கடலுக்குள் வாழும் வித்தியாசமான உயிரினம்!
Recommended image2
100 ஆண்டுகளுக்குப் பின் பேரதிசயம்: பொலிவியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பூனை இனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved