MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Sea Cucumber: பெயர் வெள்ளரி..ஆனால் இது காய்கறி இல்லங்க..கடலுக்குள் வாழும் வித்தியாசமான உயிரினம்!

Sea Cucumber: பெயர் வெள்ளரி..ஆனால் இது காய்கறி இல்லங்க..கடலுக்குள் வாழும் வித்தியாசமான உயிரினம்!

Sea Cucumber: கடல் வெள்ளரி என்றால் என்ன? எதிரி தாக்கும்போது அது எப்படி தன்னை பாதுகாத்துக் கொள்கிறது? உள்ளுறுப்புகளை வெளியேற்றுவது, மீண்டும் வளர்த்துக்கொள்வது உள்ளிட்ட கடல் வெள்ளரியின் ஆச்சரியமான குணங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 24 2026, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கடல் வெள்ளரி
Image Credit : pinterest

கடல் வெள்ளரி

இப்படி ஒரு உயிரினமா? உங்களுக்கு இது தெரியுமா? நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? பெயரைக் கேட்டதும் கடலில் வளரும் ஏதோ ஒரு வகை வெள்ளரிக்காய் என்று நினைத்துவிடாதீர்கள். பார்ப்பதற்கு வெள்ளரிக்காய் போல நீளமான, மென்மையான உடலுடன் காணப்பட்டாலும், கடல் வெள்ளரி (Sea Cucumber) உண்மையில் ஒரு கடல்வாழ் உயிரினம்.

அதிலும் ஆச்சரியம் என்ன தெரியுமா? எதிரியிடம் சிக்கும்போது சில வகை கடல் வெள்ளரிகள் தப்பிக்க செய்யும் காரியம் நம்மை வியக்க வைக்கும். ஒட்டும் நூல் போன்ற அமைப்புகளை வெளியேற்றுவது முதல், சில உள்ளுறுப்புகளையே உடலிலிருந்து வெளியேற்றி எதிரியின் கவனத்தைத் திசைதிருப்புவது வரை வித்தியாசமான தற்காப்பு முறைகள் இவற்றிடம் உள்ளன. அதைவிட ஆச்சரியம், இழந்த சில உறுப்புகளை மீண்டும் வளர்த்துக்கொள்ளும் அசாத்திய திறனும் பல கடல் வெள்ளரி இனங்களுக்கு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
கடல் வெள்ளரி என்றால் என்ன?
Image Credit : pinterest

கடல் வெள்ளரி என்றால் என்ன?

பார்ப்பதற்கு நம்ம ஊர் வெள்ளரிக்காய் போல நீளமான உடல், மெதுவாக நகரும் தன்மை. ஆனால் இது ஒரு செடியோ, காய்கறியோ கிடையாது. கடலுக்குள் வாழும் ஓர் அதிசய விலங்குதான் கடல் வெள்ளரி (Sea Cucumber).

கடல் வெள்ளரி என்பது ஹோலோதுரோயிடேயா (Holothuroidea) வகுப்பைச் சேர்ந்த முதுகெலும்பில்லாத கடல்வாழ் உயிரினமாகும். இன்னும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா? நட்சத்திர மீன் (Starfish), Sea Urchin போன்ற கடல்வாழ் உயிரினங்களின் நெருங்கிய உறவினர்தான் இந்தக் கடல் வெள்ளரி.

கடற்கரையை ஒட்டிய ஆழமற்ற கடற்பகுதிகள் மட்டுமல்லாமல், சூரிய வெளிச்சமே எட்டாத ஆழ்கடல் பகுதிகள் வரையிலும் பல்வேறு கடல் சூழல்களில் கடல் வெள்ளரிகள் காணப்படுகின்றன. பெயரிலிருந்து தோற்றம் வரை வித்தியாசமாக இருக்கும் இந்த உயிரினத்திடம் இன்னும் பல ஆச்சரியமான ரகசியங்களும் இருக்கின்றன.

38
என்ன சாப்பிடும்? கடலுக்குள்  'க்ளீனிங் வேலை' பார்க்கும் கடல் வெள்ளரி
Image Credit : pinterest

என்ன சாப்பிடும்? கடலுக்குள் 'க்ளீனிங் வேலை' பார்க்கும் கடல் வெள்ளரி

கடல் வெள்ளரியின் உணவுப் பழக்கமே ரொம்ப வித்தியாசமானது. கடலடியில் உள்ள மணல், சேறு மற்றும் படிவுகளை வாயின் வழியாக எடுத்துக்கொள்ளும் கடல் வெள்ளரி, அவற்றில் கலந்திருக்கும் சிறிய உயிரினங்கள், பாசிகள் மற்றும் கரிமப் பொருட்களை உணவாகப் பயன்படுத்துகிறது. தேவையான சத்துகளைச் செரித்துக்கொண்ட பிறகு, மீதமுள்ள மணல் மற்றும் படிவுகளை மீண்டும் வெளியேற்றுகிறது.

அதனால்தான் கடல் வெள்ளரியை சாதாரணமான கடல்வாழ் உயிரினமாக மட்டும் பார்க்க முடியாது. நிலத்தில் மண்புழுக்கள் மண்ணை உண்டு, அதன் தன்மையை மேம்படுத்த உதவுவது போலவே, கடலுக்குள் கடல் வெள்ளரிகள் முக்கியமான சூழலியல் பணியைச் செய்கின்றன. சொல்லப்போனால், கடலடியில் இயற்கையாகவே செயல்படும் ஒரு சிறிய ‘க்ளீனிங் டீம்’ மாதிரிதான் இந்தக் கடல் வெள்ளரி.

48
ஆபத்து வந்தால் என்ன செய்யும் தெரியுமா?
Image Credit : pinterest

ஆபத்து வந்தால் என்ன செய்யும் தெரியுமா?

எதிரி நெருங்கிவிட்டால் ஓடி ஒளிய முடியாது. வேகமாக நீந்தியும் தப்பிக்க முடியாது. அப்போ கடல் வெள்ளரி தனது உயிரை எப்படிக் காப்பாற்றும்? இங்கேதான் இயற்கை கொடுத்திருக்கும் ஆச்சரியமான பாதுகாப்பு யுக்தி வேலை செய்கிறது.

மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட எதிரிகள் தாக்கும்போது, சில வகை கடல் வெள்ளரிகள் ‘Cuvierian tubules’ எனப்படும் நீளமான, மிகவும் ஒட்டக்கூடிய நூல் போன்ற குழாய்களை உடலின் பின்பகுதி வழியாக வெளியேற்றுகின்றன. வெளியே வந்ததும் இந்தக் குழாய்கள் வேகமாக நீண்டு, எதிரியின் உடலில் ஒட்டிக்கொள்ளும். இதனால் எதிரியின் கவனம் திசைதிருப்பப்படலாம். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடல் வெள்ளரி தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளும்.

பார்ப்பதற்கு அமைதியான உயிரினமாகத் தெரிந்தாலும், ஆபத்து வந்தால் தனக்கென ஒரு வித்தியாசமான ‘டிஃபென்ஸ் சிஸ்டத்தை’ பயன்படுத்தும் அதிசய உயிரினம்தான் கடல் வெள்ளரி.

58
உயிரைக் காப்பாற்ற உள்ளுறுப்புகளையே வெளியேற்றுமா?
Image Credit : pinterest

உயிரைக் காப்பாற்ற உள்ளுறுப்புகளையே வெளியேற்றுமா?

கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆபத்து நேரத்தில் சில கடல் வெள்ளரி இனங்கள் தங்களுடைய உள்ளுறுப்புகளில் சிலவற்றையே உடலிலிருந்து வெளியேற்றும் வித்தியாசமான தற்காப்பு முறையைக் கொண்டுள்ளன. ஆனால், எல்லா கடல் வெள்ளரி இனங்களும் இப்படிச் செய்வதில்லை.

கடுமையான அச்சுறுத்தல் அல்லது தாக்குதலை எதிர்கொள்ளும்போது, சில இனங்கள் செரிமானப் பாதையின் பகுதிகள் உள்ளிட்ட சில உள்ளுறுப்புகளை வெளியேற்றக்கூடும். இந்த நிகழ்வுக்கு அறிவியல் ரீதியாக ‘Evisceration’ என்று பெயர்.

இவ்வாறு இழந்த சில உள்ளுறுப்புகளை குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் வளர்த்துக்கொள்ளும் (regeneration) திறனும் பல கடல் வெள்ளரி இனங்களுக்கு உள்ளது.

உயிரைக் காப்பாற்ற உள்ளுறுப்பையே தியாகம் செய்து, பின்னர் அதை மீண்டும் உருவாக்கிக்கொள்ளும் திறன், இயற்கையின் வியக்க வைக்கும் உயிரினங்களில் கடல் வெள்ளரியும் ஒன்று என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் வேண்டுமா?

68
பின்பகுதி வழியாக மூச்சு விடுமா? கடல் வெள்ளரியின் இன்னொரு ஆச்சரியம்!
Image Credit : pinterest

பின்பகுதி வழியாக மூச்சு விடுமா? கடல் வெள்ளரியின் இன்னொரு ஆச்சரியம்!

கடல் வெள்ளரிகளுக்கு மனிதர்களைப் போன்ற நுரையீரல் கிடையாது. பல கடல் வெள்ளரி இனங்களின் உடலுக்குள், செரிமானப் பாதைக்கு அருகில் ‘Respiratory trees’ எனப்படும் மரக்கிளைகளைப் போன்று பிரிந்த சிறப்பு சுவாச அமைப்பு காணப்படுகிறது.

கடல் வெள்ளரி தனது உடலின் பின்பகுதியில் உள்ள cloaca வழியாக கடல்நீரை உள்ளே இழுத்து, பின்னர் வெளியேற்றுகிறது. இவ்வாறு நீர் தொடர்ந்து உள்ளே சென்று வெளியேறும்போது, Respiratory trees மூலம் ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளப்பட்டு, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.

78
கடலுக்குள் இயற்கை சுத்திகரிப்பாளர்
Image Credit : pinterest

கடலுக்குள் இயற்கை சுத்திகரிப்பாளர்

பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் கடல் சூழலுக்கு இதன் பங்கு மிக முக்கியம். கடலடியில் உள்ள படிவங்களை உண்டு, அதிலிருக்கும் கரிமப் பொருட்களைச் செயலாக்குவதன் மூலம் ஊட்டச்சத்து சுழற்சிக்கு கடல் வெள்ளரிகள் உதவுகின்றன. குறிப்பாக பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல் சூழல்களில் Deposit Feeder ஆக செயல்பட்டு, கடலடி சூழலின் இயற்கையான செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன.

88
கடலில் பார்த்ததும் எடுத்துடாதீங்க..சிக்கலில் மாட்டிக்கலாம்!
Image Credit : pinterest

கடலில் பார்த்ததும் எடுத்துடாதீங்க..சிக்கலில் மாட்டிக்கலாம்!

கடல் வெள்ளரி கிடைத்தால் ஆர்வத்தில் பிடித்து வீட்டுக்கு எடுத்துச் செல்லலாமா? இந்தியாவின் Wild Life (Protection) Act, 1972-ன் கீழ், Holothuroidea வகுப்பைச் சேர்ந்த அனைத்து Sea Cucumber இனங்களும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

எனவே கடல் வெள்ளரிகளைப் பிடிப்பது, சேகரிப்பது, வைத்திருப்பது அல்லது வணிக நோக்கில் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. கடலில் பார்த்தால் ரசித்துவிட்டு அப்படியே விட்டுவிடுங்கள். ஆர்வத்தில் கையில் எடுத்துச் செல்வது சட்டச் சிக்கலை ஏற்படுத்தலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உலகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Diesel Price: நிஜமாவே, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.15 குறையப்போகுதா?! காரணம் தெரியுமா?!
Recommended image2
USA Lifestyle: அமெரிக்காவுல வீதிக்கு வந்தா ஏன் ஆளையே காணோம்? அவங்க என்னதான் பண்ணுவாங்க?
Recommended image3
One Kidney Village: சாப்பாட்டுக்காக கிட்னியை விற்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்... இதுதான் காரணம்!
Related Stories
Recommended image1
Snake In House: இந்த வாசனை வந்தா உங்க வீட்ல பாம்பு இருக்குனு அர்த்தம்
Recommended image2
100 ஆண்டுகளுக்குப் பின் பேரதிசயம்: பொலிவியக் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பூனை இனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved