- Home
- Tamil Nadu News
- மத்திய அரசுக்கு எதிராக திருப்பி அடிக்க ஆரம்பித்த ஸ்டாலின்! சுப்ரீம் கோர்ட் படியேறிய தமிழக அரசு!
மத்திய அரசுக்கு எதிராக திருப்பி அடிக்க ஆரம்பித்த ஸ்டாலின்! சுப்ரீம் கோர்ட் படியேறிய தமிழக அரசு!
மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக அரசுக்கு, புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது.

மும்மொழி கொள்கை
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுத்து வருகிறது. ஆனால், புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.2,152 நிதியை வழங்குவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
மேலும் மத்திய மந்திரியின் அறிவிப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. ரூ.10,000 கோடி கொடுத்தாலும் மும்மொழியை கொள்கையை ஏற்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் நீடித்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதன்படி ரூ. 2,291 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு
அந்த மனுவில், புதிய கல்வி கொள்கை, சமக்ரா சிக்ஷா திட்டங்களின் கீழ் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படவில்லை எனவும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் ரூ.2291 கோடி நிதி தரப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் என தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் ரூ. 2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு உள்ளது.