அன்பில் மகேசை அலற விட்டு மாஸ் காட்டிய அதிமுக..! திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு!
வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெரும் கூட்டங்களை திரட்டி மாஸ் காட்டிய இபிஎஸ், இன்று முதல் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேநேரத்தில் அதிமுக விட்டதை பிடிக்க வேண்டும் என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் பொது எதிரியை வீழ்த்த கூட்டணியில் இணையுமாறு விஜய், சீமான் உள்ளிட்ட கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் ஆளும் திமுகவுக்கு முன்னதாகவே அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 7ம் தேதி கோவையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை தொடங்கினார். முதலில் அரசியல் விமர்சகர்கள் இபிஎஸ் சுற்றுப்பயணம் பிசுபிசுத்து போகும் கூறப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கூட்டத்தை காட்டி கெத்து காட்டினார். கோவைவில் மட்டும் அப்படி இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போகும் இடமெல்லாம் அதிக கூட்டங்களை காட்டி இபிஎஸ் மாஸ் காட்டி வருகிறார். வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 46 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்துள்ளார்.
இன்று முதல் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகிலும், மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகிலும், இரவு 7.45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலில் பேசுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அலைக்கடலென தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பாக வீடியோ, போட்டோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அம்மாவட்ட அமைச்சர்களான அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு மிரண்டு போயுள்ளனர். விரைவில் உதயநிதி ஸ்டாலின் திமுக தரப்பில் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அவருக்கு இதைவிட இரண்டு மடங்கு கூட்டத்தைக் கூட்ட அம்மாவட்ட அமைச்சர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.