- Home
- Tamil Nadu News
- இந்த வயசுல இதெல்லாம் தேவையா? மாணவிகளிடம் டபுள் மீனிங் பேச்சு! ஓய்வு பெறும் நேரத்தில் ஆசிரியருக்கு ஆப்பு!
இந்த வயசுல இதெல்லாம் தேவையா? மாணவிகளிடம் டபுள் மீனிங் பேச்சு! ஓய்வு பெறும் நேரத்தில் ஆசிரியருக்கு ஆப்பு!
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் அன்பழகன் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது போன்ற ஒழுங்கின செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை கல்வி சான்றுகள் ரத்து உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் குற்றம் குறைந்தபாடியில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவிகளுக்கு தேர்வு கண்காணிப்பாளர் பாலியல் சீண்டல் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
கள்ளக்குறிச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் அன்பழகன்(59) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு அச்சம்! சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை! நெஞ்சில் அடித்து கதறும் பெற்றோர்!
இரட்டை அர்த்தத்தில் ஆபாச பேச்சு
இவர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மது, கஞ்சா இரண்டும் எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று! அன்புமணி!
ஆசிரியர் பணியிடை நீக்கம்
இதனையடுத்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர் அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் அன்பழகன் இன்னும் 3 மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.