- Home
- Tamil Nadu News
- 75 % தள்ளுபடி விலையில் மருந்துகள்.! தமிழகத்தில் எந்த எந்த இடங்களில் முதல்வர் மருந்தகம் தெரியுமா.?
75 % தள்ளுபடி விலையில் மருந்துகள்.! தமிழகத்தில் எந்த எந்த இடங்களில் முதல்வர் மருந்தகம் தெரியுமா.?
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு! தனியார் கடைகளை விட 75% குறைவான விலையில் மருந்துகள் கிடைக்கும். நடுத்தர மக்களின் மருத்துவ செலவு குறையும்.

தமிழகத்தில் எந்த எந்த இடங்களில் முதல்வர் மருந்தகம் தெரியுமா.?
திமுக 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அதன் படி மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் கனவு இல்லத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். இல்லம் தேடி கல்வி என பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அறிவிக்காத பல வாக்குறுதிகளையும் புதிய திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் படி நடுத்தர வர்க்க மக்களுக்கு பெரும் சுமையாக இருப்பது மருத்துவ சிகிச்சை தான்.
குறைந்த விலையில் மருந்துகள்
தனியார் மருத்துவமனையில் பல ஆயிரங்களில் கட்டணம் ஒரு பக்கம் வந்தால் மருந்துகளுக்கு என்றே மாதம், மாதம் ஒரு தொகை ஒதுக்க வேண்டிய நிலை வரும். இதனால் மாத சம்பளத்தில் பெரிய அளவு பற்றக்குறை ஏற்படும். எனவே நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் படி இன்று காலை பாண்டி பஜாரில் முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்ட பின்னர், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
3 லட்சம் ரூபாய் மானியம்
முன்னதாக முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம் அல்லது டி.பார்ம் சான்று பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு தகுதியானர்கள் தேர்வு செய்யப்பட்டனர். விண்ணப்பதாரர்களுக்குப் பயிற்சி அளித்து முதல் தவணை மானியத்தொகை 1.50 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. இறுதிக்கட்ட மானியமாக ரூ.1.50 லட்சம் மதிப்புக்கு மருந்துகளாக வழங்கப்பட்டது.
தள்ளுபடி விலையில் மருந்துகள்
இந்த மருந்தகத்தில் மருந்துகளின் விலையானது வெளியில் உள்ள தனியார் கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையில் பல மடங்கு குறைவாக விற்பனை செய்யப்படவுள்ளது. குறிப்பாக 75 % தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மருந்தகம் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், எந்த மாவட்டத்தில் எத்தனை கடைகள் என்ற பட்டியில் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எந்த இடத்தில் முதல்வர் மருந்தகம்
அதன் படி, அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகமும், செங்கல்பட்டில் 36 மருந்தகமும், சென்னையில் 29 மருந்தகமும், கோவையில் 42 மருந்தமும், கடலூரில் 49 மருந்தகமும், காஞ்சிபுரத்தில் 26 மருந்தகமும் கன்னியாகுமரியில் 36 மருந்தகமும், மதுரையில் 52 மருந்தகமும் ஆக மொத்தம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரம் மருந்தகங்களானது திறக்கப்பட்டுள்ளது இந்த மருந்தகத்தில் மருந்தின் விலையானது மற்ற மருந்தகத்தை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது