- Home
- Tamil Nadu News
- 12 மாவட்ட விவசாயிகளின் அட்ஷய பாத்திரம் மேட்டூர்.! அணை கட்டப்பட்டது எப்படி தெரியுமா?
12 மாவட்ட விவசாயிகளின் அட்ஷய பாத்திரம் மேட்டூர்.! அணை கட்டப்பட்டது எப்படி தெரியுமா?
விவசாயத்தின் முக்கிய அங்கமான மேட்டூர் அணை, காவிரி நீரைத் தேக்கி வைத்து விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது. தமிழகத்தின் விவசாயம், மின்சாரம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு முக்கியமானதாக உள்ளது.

தமிழகத்தில் விவசாய உற்பத்தி
தமிழகத்தில் விவசாய உற்பத்தி மாநில பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக உள்ளது, பல்வேறு பயிர்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மிகவும் பயிரிடப்படும் பயிர். காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 80-100 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 60 லட்சம் ஹெக்டேர் நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிகளின் தாய் காவிரி ஆறு
கிணறுகள், கால்வாய்கள், ஆறுகள் (காவிரி, தாமிரபரணி) மூலம் 50-60% விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன. அந்த வகையில் 019-20 ஆம் ஆண்டில் 146.77 லட்சம் ஏக்கராக இருந்த மொத்தச் சாகுபடிப் பரப்பளவு 2023-24 ஆம் ஆண்டில் 151 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதரமாக இருப்பது காவிரி ஆகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு பல மாவட்டங்களை கடந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுவிலிருந்து ஒக்கேனக்கல் தருமபுரி, சேலம் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது.
காவிரி தண்ணீரை சேமிக்கும் மேட்டூர் அணை
கர்நாடகாவில் இருந்து பாய்ந்து வரும் நீரானது சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வகையில் காவிரி நீரை தேக்கி வைத்து பாதுகாக்கும் அரணாக மேட்டூர் அணை உள்ளது.
அந்த வகையில் மேட்டூர் அணையை எப்போது கட்டப்பட்டது.?யாரால் கட்டப்பட்டது. எதற்காக கட்டப்படது என்பதை தற்போது பார்க்கலாம். வேளாண்மைக்கு தண்ணீர் வழங்கும் காவிரி ஆறு உழவர்களின் தாய் என்றால், காவிரியில் வெள்ளம் போல வரும் தண்ணீரை தேக்கி வைத்து தேவைக்கு ஏற்ப வழங்கும் மேட்டூர் அணை தான் உழவர்களின் தந்தை என அன்பாக அழைக்கப்படுகிறது.
மேட்டூர் அணை கட்டப்பட்டது எப்படி.?
மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகளை தாண்டியுள்ளது. காவிரியின் குறுக்கே மேட்டூர் அணையை கட்ட பல ஆண்டுகாலமாக மைசூர் சமஸ்தானம் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு கட்டப்பட்டது தான் மேட்டூர் அணை. 1924-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேட்டூர் அணையின் கட்டுமானப் பணிகள் 1934-ஆம் ஆண்டில் நிறைவடைந்து ஆகஸ்ட் 21-ஆம் நாள் தான் அணை திறக்கப்பட்டது. ங்கிலப் பொறியாளர்கள் எல்லீஸ் மற்றும் ஸ்டான்லி ஆகியோர் தலைமையில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல ஆண்டுகள் உழைத்து கட்டியது தான் மேட்டூர் அணை ஆகும்.
12 மாவட்ட விவசாயிகளுக்கு பயன்
இந்த அணையால் தமிழகத்தில் உள்ள விவசாயம் பெரிதும் பலனடைந்து வருகிறது. மேட்டூர் அணை இன்றும் தமிழ்நாட்டின் விவசாய, மின்சார மற்றும் குடிநீர் தேவைகளுக்கு முக்கியமானதாக உள்ளது. இது ஒரு பொறியியல் சாதனையாகவும், தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் விவசாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டமைப்பாகவும் திகழ்கிறது. மேட்டூர் அணை கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான காவிரி நதி நீர் பங்கீட்டு மோதலில் மையப் பங்கு வகிக்கிறது. இது பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களுக்கு காரணமாக உள்ளது.
மேட்டூர் அணை திறப்பு
இதனிடையே டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முதற்கட்டமாக விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பின்னர் படிப்படியாக 12,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.