- Home
- Tamil Nadu News
- அடுத்த 3 மணிநேரத்தில்! வானிலை மையம் கொடுத்த வார்னிங்! விரைந்த பேரிடர் மீட்பு படை!
அடுத்த 3 மணிநேரத்தில்! வானிலை மையம் கொடுத்த வார்னிங்! விரைந்த பேரிடர் மீட்பு படை!
கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. அதாவது வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நீலகிரி கோவைக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக இன்ற தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய சென்னை வானிலை நிலவரம்
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மீட்பு படை
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு படையை பொறுத்தவரையில் நீலகிரிக்கு 3 குழுக்களும் கோவைக்கு 2 குழுக்களும் விரைந்துள்ளனர்.
காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழை
இந்நிலையில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.