மாணவர்களுக்கு குஷி.! காலாண்டு தேர்வு விடுமுறை இத்தனை நாட்களா.? அசத்தல் அறிவிப்பு
School students : நடப்பு கல்வியாண்டின் காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 26 அன்று முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளுக்கு செப்டம்பர் 27 முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு
பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டானது ஜூன் மாதம் முதல் வாரம் தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதில், நடப்பு கல்வியாண்டின் வேலை நாட்கள், விடுமுறைகள், தேர்வு அட்டவணை, பயிற்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தமாக முதலில் 220 நாட்கள் வேலை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பல தரப்புகளின் கோரிக்கையை ஏற்று 10 நாட்கள் குறைக்கப்பட்டு 210 நாட்கள் ஆக திருத்தப்பட்டது.
பள்ளி நாட்காட்டி வெளியீடு
குறைக்கப்பட்ட 10 நாட்கள் ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாட்களாக பயன்படுத்தப்படும் என தெரிஇக்கப்பட்டது. இந்த கல்வியாண்டில் ஜூன் 10 அன்று பள்ளிகள் தொடங்கி ஏப்ரல் 12 அன்று முடிவடையும் வகையில் நாட்காட்டி வெளியிடப்பட்டது.
மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் +1, +2 பொது தேர்வுகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தற்போது தொடங்கியுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை
செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கிய தேர்வு வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே இந்த தேர்வுகள் வருகிற 26ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில்,
வருகிற 27ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்படப்படவுள்ளது. எனவே காலாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது.
பள்ளிகளில் 6 முதல் 10 நாள் விடுமுறை
அரசு பள்ளிகளில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கவுள்ளது. இதுவே தனியார் பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனால் 6 நாள் மட்டுமே விடுமுறையானது கிடைக்கவுள்ளது.
இதனை தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைக்கவுள்ளது. எனவே காலாண்டு விடுமுறையொட்டி வெளியூர் செல்ல மாணவர்களோடு பெற்றோர்களும் பயண திட்டங்களை வகுத்து வருகிறார்கள்.