தாம்பரத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பழனி, கோவைக்கு சிறப்பு ரயில்; புக்கிங் ஆரம்பம்!!
Diwali Special Train : ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறைகளுக்கும், தீபாவளி விடுமுறைக்கும் சிறப்பு ரயில்களை சென்னையில் இருந்து இயக்க தென்னக ரயில்வே தயாராகி உள்ளது.
Weekly Special Train
பிற ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு அதிக அளவிலான விடுமுறைகள் வார இறுதியை நோக்கி அமைந்திருப்பதால், பெரிய அளவில் பலருக்கும் விடுமுறைகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 10, 11 மற்றும் அக்டோபர் 31ம் தேதிகளில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை, அதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை என்று விழா கோளத்திற்குள் தமிழகம் நுழைந்து இருக்கிறது என்றே கூறலாம். இப்போதிலிருந்து துணிக்கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் சற்று முன்னதாகவே எதிர்பார்க்கப்படும் நிலையில், கூட்ட நெரிசலை மழை நேரங்களில் தவிர்க்க மக்கள் இப்போதே பர்ச்சேஸில் இறங்கிவிட்டனர்.
2 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.! மகளிர் விடுதிக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த அரசு
Tambaram
இந்த சூழலில் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் மற்றும் படித்து வரும் பிற ஊர்களை சேர்ந்த மக்கள் தற்பொழுது இந்த பூஜை விடுமுறைகள் மற்றும் தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இப்போதே தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தென்னக ரயில்வேயும் அவர்களுக்கு உதவ அதற்கான முன்னேற்பாடுகளை தற்பொழுது முழுமையாக செய்து முடித்து இருக்கிறது. அந்த வகையில் தாம்பரத்திலிருந்து கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Coimbatore
வண்டி என் 06184 தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் செல்லுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். அதாவது அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை 11, 18, 25 ஆகிய தேதிகளிலும். நவம்பர் மாதத்தை பொறுத்தவரை 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்த ரயில்கள் பயணிக்க உள்ளது. அதேபோல கோவையில் இருந்து 06185 என்கின்ற ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு பயணிக்கவிருக்கிறது. குறிப்பாக அக்டோபரில் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நவம்பர் மாதத்தில் 10, 17, 24 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியும் இந்த ரயில் செயல்பட உள்ளது.
Diwali Special Train
இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவு இப்போது இருந்து தொடங்கி இருக்கிறது. இந்த ரயில் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூருக்கும், குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்புத்தூரில் இந்த புறப்பட்டு சென்னைக்கும் வந்தடைகிறது என்றாலும் கூட, இடையில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கூடலூர் மற்றும் கோவை ஆகிய ஊர்கள் வழியாக இந்த ரயில் பயணிப்பதால் இந்த ஊர்களில் உள்ள அனைவரும் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோல வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் இந்த சிறப்பு ரயிலானது மாலை 6 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8:10க்கு கோவைக்கு சென்றடைகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டும் அந்த ரயில் தாம்பரத்திற்கு அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கு வந்து சேர்கிறது.
Yogi Babu Video: புதிய வேடத்தில் களவானிகள்; வீடியோ வெளியிட்ட யோகி பாபு - போலீஸ் எச்சரிக்கை!