TamilNadu Government: மளிகை பொருட்கள் விலை குறையப்போகிறது? தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக தமிழக அரசு!
Tamilnadu Government Super Plan: தமிழகத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு போட்டியாக தமிழக அரசு அமுதம் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட்டு, மெகா ஸ்டோர்களாக மேம்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் மாளிகை பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அமுதம் அங்காடிகள் செயல்படுகின்றன.
இதையும் படிங்க: TN Government Bus: இரவு 10 மணிக்கு மேல் வரும் பயணிகளுக்கு குஷியான செய்தி! போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்கில், நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மூலம் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. சுய சேவை முறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன. இவை நீண்ட காலமாக குறைந்த விலையில் மக்களுக்குப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 300க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன.
சென்னையில் கோபாலபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமுதம் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அங்காடிகள் நகரின் மத்தியில் இருந்தாலும் குறைந்த இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டன. இந்நிலையில் அமுதம் அங்காடிகள் விரிவுபடுத்தப்பட்டு, மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தனியார் டிபார்ட்மெண்ட் கடைகளின் போட்டியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: Tamilnadu Government Employee: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்வு!
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில், பல்வேறு தனியார் நிறுவனங்கள், மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் பெரிய ஸ்டோர்களை நடத்தி வருகின்றன. அதற்கு போட்டியாக கூட்டுறவுத்துறையும், அமுதமும், வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக பெரிய அளவில் மெகா ஸ்டோரை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெரிய ஸ்டோர் திறந்து, அங்கு கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவி குழு தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்து பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள், பழங்கள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு கடைகள் இந்த மெகா ஸ்டோருடன் ஒருங்கிணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.